‘வேதாளம்’ டிரைலர் இன்று நோ ரிலீஸ்! அஜீத் ரசிகர் வருத்தம்!

Must read

vedhalamm

ஜீத் நடித்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கும் “வேதாளம்” படடத்தின் டிரைலர் இன்று வெளிவரும் என மிகுந்த ஆர்வத்துடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ஆனால் இன்று டிரைலர் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் சொல்கின்றன.

படம் ரிலீஸ் ஆக இன்னும் சில தினங்களே இருக்கையில் ஏன் இந்த தாமதம் என்ற பரபப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் 10 தீபாவளி அன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு தகவல் பரவியிருப்பதால் படத்தின் ரிலீஸும் தள்ளிப்போகுமோ என்று பலரும் நினைத்தார்கள்.

ஆனால், “இன்று டிரைலர் வெளியாவது சந்தேகம்தான். ஆனால் படத்தின் ரிலீஸில் எந்தவித சிக்கலும் இல்லை. எல்லா பிரச்சினைகளும் முடிந்துவிட்டன. தீபாவளி அன்று கட்டாயம், வேதாளத்தை பார்க்கலாம்” என்று தயாரிப்பாளர் வட்டாரம் சொல்கிறது.

அப்புறம் ஏன் தாமதம் என்றுதான் தெரியவில்லை!

More articles

Latest article