6S1A8169_1450943573

 

ல்லவர்.. கெட்டவர்.. ஏழை.. பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் வாட்டி வதைத்து விட்டது சென்னை வெள்ளம். இந்த பாதிப்பில் இருந்து தமிழகம் மெல்ல மீள தொடங்கியுள்ளது. பணம் இருப்பவர்கள் இந்த பாதிப்பை உடனடியாக சரி செய்துவிட்டார். ஆனால் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் பல சிறப்பு பள்ளிகள் மீண்டும் தலை தூக்க திணறி வருகின்றன.

இந்த வகையில் சென்னையில் பார்வையிழந்தவர்கள், காதுகேளாதவர்களுக்காக லிட்டல் ஃப்ளவர் (சிறுமலர்) கான்வென்ட் பள்ளி வரும் ஜனவரி 6ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் சேதம், இழப்பு போன்றவை தான் இதற்கு காரணம்.

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பள்ளி அறைகள், விடுதிகளை பதம்பார்த்துவிட்டுச் சென்றுவிட்டது. இதை பழைய நிலைக்கு மாற்ற பள்ளி நிர்வாகத்தினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

6S1A8158_1451029794

இந்த சிறப்பு பள்ளியில் 927 மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இதில் 250 பேர் அடுத்த மூன்று மாதத்தில் அரசு பொதுத் தேர்வை சந்திக்கின்றனர். இந்த நிலையில் காது கேட்கும் கருவி, சிறப்பு மேஜைகள், பெஞ்சுகம், பார்வைற்றோருக்கான பிரெயில் பிரின்டர்ஸ், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் உபகரணங்கள் போன்றவை வெள்ளத்தால் பழுதடைந்துவிட்டன.

6S1A8159_1451029522

இவற்றின் மதிப்பு 300 மில்லியன் ரூபாயாகும். 23 நாட்கள் மின்சாரம் இன்றி இப்பள்ளி இருளில் மூழ்கி கிடந்தது. ‘‘ காது கேட்கும் குழு கருவி, பாடம் நடத்த உதவும் பிரெயிலி பிரின்டர்ஸ், பர்னிச்சர்கள், ஆயிரம் ஆடியோ கேசட் டுகள், சிடி, புத்தகம் என அனைத்தும் நாசமாகிவிட்டது’’ என பள்ளியின் தாளாளர் சகோதரி அமலா கூறினார். ‘‘ காது கேட்கும் குழு கருவி ஆய்வுக் கூடம் முற்றிலும் அழிந்துவிட்டது.

மேலும் தற்போது இருக்கும் கருவிகளும் மின் கசிவு இருக்கலாம் என்ற காரணத்தால் அதையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பள்ளியை மீட்டெடுக்க இரவு பகலாக பணியாற்றுகின்றனர். ஆயிரம் பேர் கொண்ட குழுவுக்கு காது கேட்கும் கருவி, இரு பிரெயிலி பிரின்டர்கள் வாங்கவும், கம்ப்யூட்டர் லேப் பே £ன்றவற்றை சீரமைக்க ரூ. 20 லட்சம் நிதி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி பாதிப்பு காரணமாக கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

6S1A8146_1450944053

 

அதனால் நன்கொடை மூலமே பள்ளியை புணரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முழு நன்கொடையும் பள்ளிக்கே செல்ல இருப்பதால், இதற்கு நிதியுதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த நன்கொடைக்கு வரி விலக்குக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வாருங்கள்!

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள தொடுப்பைச் சுட்டுங்கள்..

https://milaap.org/campaigns/chennaispecialschools?utm_source=facebook&utm_medium=cpc&utm_campaign=cta-fund-open