விலைமாது வேடத்தில் ஆண்ட்ரியா, ரவுடியாக தனுஷ்

Must read

.r
வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான விசாரணை திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
இந்த நிலையில் தனது அடுத்த படமான வடசென்னை பற்றிய சில தகவல்களை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார்.
“வட சென்னை படம், சென்னையில் வசித்த மிகப் பெரிய ஒரு ரவுடியின் வாழ்க்கை கதை. அந்த ரவுடி வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
படத்தில் சமந்தா, ஆண்ட்ரியா என்று இரு நாயகிகள்.  ஆண்ட்ரியா விலைமாது வேடத்தில் நடிக்கிறார். அவரது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய சவாலான கேரக்டர். இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் சமந்தா இதில் குப்பத்துப் பெண்ணாக நடிக்கிறார். அவரக்கும் சவாலான கேரக்டர்தான்.
இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்.   ப்ரீ- புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும்” என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.
இப்படத்தில் முதலில், நடிகர் சிம்பு ஒப்பந்தமானதும் பின்னர் அவருக்குப் பதிலாக தனுஷ் நடிக்கவிருப்பதும் ரொம்ப ரொம்ப குறிப்பிடத்தக்கது.
 

More articles

Latest article