விஜய் மீது ஸ்ரீதேவி புகார்!

Must read

big-b-sridevi_640x480_51434893659

மீபத்தில் வெளியான விஜய்யின் ‘புலி’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு பெரிய சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது, தற்போதைய டாப் ஹீரோயின்களின் சம்பளத்தை விட அதிகமாக!

ஆனால் படம் வெளியாகி நீண்ட நாள் ஆகியும் செட்டில் செய்யப்படவில்லையாம். இது குறித்து ஸ்ரீதேவி புலி படத் தயாரிப்பாளரிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் இல்லையாம். இந்த நிலையில் தனக்கு சேர வேண்டிய பணத்தை புலி படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுத் தருமாறு மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை ஸ்ரீதேவி புகார் செய்துவிட்டார்.

இந்தப் புகாரை தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு மும்பை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஃபார்வேர்ட் செய்திருக்கிறது. தற்போது அவர்கள் புலி படத் தயாரிப்பாளரிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

“ஸ்ரீதேவி புகார் கொடுத்திருப்பது விஜய் மீதுதான்” என்றும் கோலிவுட்டில் சிலர் போட்டுத்தாக்குகிறார்கள். “விஜய்யின் மேனேஜர் பி.டி. செல்வகுமார்தான் படத்தின் தாயாரிப்பாளர். ஆகவே இது விஜய் படம்தான்” என்று விளக்கமும் கொடுக்கிறார்கள்.

மயிலு மனச நோகடிக்காதீங்கப்பா!

More articles

Latest article