விசாரணை கைதி சாவு எதிரொலி! மதுரையில் சாலை மறியல்!!

Must read

மதுரை:
துரையில் விசாரணை கைதி சிறையில் இறந்ததையொட்டி அவரது உறவினர்கள் மற்றும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்தனர்.
‘      கடந்த 15ம் தேதி மதுரை மத்திய சிறையில்  சாணார்பட்டியை சேர்ந்த குப்புசாமி தேவர் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
ஏற்கனவே உடல் நல குறைவில்  இருந்த அவர் கடந்த 15ம் தேதி சிறையில்  திடீரென மயங்கி விழுந்ததாகவும், உடனே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
detha
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சாணார்  பட்டி மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்களும், உறவினர்களும் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை  கோரிப்பாளையம் சாலை சந்திப்பில் திடீரென  மறியலில்  ஈடுபட்டனர்.  கோரிப்பாளையம் சாலை சந்திப்பில்  100க்கும்  மேற்பட்டோர் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.
சிறையில் இறந்த குப்புசாமி தேவர் மரணத்துககு இழப்பீடு வழங்கவும், மேலும் சாவு குறித்து நீதி விசாரணை நடந்த வேண்டும்  எனவும் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கை நிறைவேறும்  வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
 

More articles

Latest article