astrology_symbol-satyam1
(10.02.2016முதல் 16.02.2016வரை தைமாதம் 27 புதன்கிழமை முதல் மாசிமாதம் 4தேதிசெவ்வாய்கிழமை வரை)

தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேசம் ராசி நேயர்களே
உங்கள்ராசியதிபதி ஏழில் கேந்திரம் பெற்றும் சந்திரன் லாபஸ்தானத்தில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.  தொழில் ரீதியாக இந்த வாரம்நன்றாக இருக்கும் புது முயற்சியில் இறங்குவீர்கள் சிறு தடங்கள்களுக்கு பின் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும்.  விட்டுப்போன சொந்தம் ஒன்று உறவாகும், மற்றொரு சொந்தம்பகையாகும் எனவே பெரிய மனகுழப்பத்திற்கு ஆளாகாமல் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.! ஆறாம் இடத்தில் குரு இன்னும் வக்கிரகதியிலயேதொடர்கிறார்.!! எனவே எதிரிகளின் சூழ்ச்சிகளை எளிதில் முறியடிப்பீர்கள்.
எட்டாமிடத்து சனி பகவான் சிறு சிறு மனசஞ்சலங்களை கொடுப்பார். சனி பகவானை தொடர்ந்து வழிபடுவது பாதிப்புகளை குறைக்கும்.
தனாதிபதி சுக்கிரன் ஒன்பதில் இருப்பது பொருளாதார வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பத்தில் சூரியன்,புதன் இருப்பது தொழில் வித்தியாசமானஅனுகுமுறைகளை கையாள்வீர்கள் அதில் வெற்றியும் பெறுவீர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கூள பெறுவீர்கள்..
இந்த வாரம் உங்களுக்கு ராசியான நிறம் வெள்ளை ராசியான கிழமை வியாழன்,வெள்ளி வணங்க வேண்டிய கடவுள் சக்கரத்தாழ்வார்.!!
ரிஷப ராசி நேயர்களே…!
உங்கள் ராசியதிபதி எட்டாம் இடத்திலும் சந்திரன் பத்தில் கேந்திரம் பெற்று இருக்கையில் இந்த வாரம் தொடங்குகிறது..தனாதிபதி புதன் ஒன்பதில் இருப்பதுபெரிய பலம் என்றே கூறலாம்.. இதனால் தொழில் நன்றாக நடக்கும் பூமி சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்கள் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு.
ஐந்தில் வக்கிரமாக இருக்கும் குருவால் குழந்தைகள் நலனில் அக்கறை செழுத்தவும் ஏழாமிடத்து அதிபதி செவ்வாய் ஆறில் இருப்பது மனைவியுடனோ,அவர்களின் குடும்ப உறவினர்கள் மூலமாக சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு பொறுமையாக கையாளவும்.
ஏழில் இருக்கும் சனி பகவான் மூன்றாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தை பார்ப்பதால் அலைச்சல் சார்ந்த தொழில் இருக்கும் அதனால் நன்மைகள்தான்உண்டாகும்.
இந்த வாரம் ராசியான நிறம் நீலம் ராசியான கிழமை புதன் வழிபட வேண்டிய கடவுள் மாகலட்சுமி.!!
மிதுன ராசி நேயர்களே..!
இந்த வாரம் உங்கள்ராசியதிபதி புதன் எட்டாம் இடத்திலும், சந்திரன் ஒன்பதில் கோணம் பெற்றிருக்கிற சூழ்நிலையில் இந்த வாரம் தொடங்குகிறதுதனாதிபதி பலம் பெற்று இருப்பதால் இந்த வாரம் நன்மைகளே அளிக்கும் தொழில் ரீதியாக எதிர்பாராத வரவுகள் கிட்டும்.
நான்கில் இருக்கும் வக்கிர வியாழன் தாயால் நன்மையும், தாய்க்கி சில மருத்துவ செலவுகளும் கொடுத்து விலகும். ஐந்தில் செவ்வாய் குல தெய்வ வழிபாடுமிகுந்த நன்மைகை தரும்.
ஆறில் சனிபகவான் இருப்பது அற்புத யோகமாகும் எந்த தடைகளையும் உடைத்தெறிந்து பயணம் கொள்வீர்கள் ஏழாமிட்து சுக்கிரன் மனைவி வழி சுப காரியசெலவுகள் அதிகரிககும் எட்டாமிட சூரியன்,புதன் சேர்க்கை உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் கொடுக்கும்,உணவு விசயத்தில் கவனம் தேவை. ஒன்பதில்கேது பித்ரு தர்ப்பணங்கள் செய்ய ஏற்ற காலம்..
இந்த வாரம் ராசியானநிறம் பச்சை,மஞ்சள் ராசியன கிழமை சனிக்கிழமை,வியாழன் வழிபட வேண்டிய கடவுள் தட்சிணாமூர்த்தி.!!
கடக ராசி நேயர்களே…!
உங்கள் ராசியதிபதி எட்டாம் இடத்திலும் ,தனஸ்தானதிபதி ஏழாம் இடத்திலும் இருக்கிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது. சந்திராஷ்டத்துடன்தொடங்குகிறது புதன்,வியாழக்கிழமைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புது முயற்சிகளை அந்நாட்களில் மேற்கொள்ளாதீர்கள், வெளியூர்பயணங்களை தவிர்க்கவும்.
மூன்றாம் இட வக்கிரவியாழனால் வாழ்வை நினைத்து சிறு சறு பயம் தோன்றலாம் ஆனால் அதையெல்லாம் நான்காம் இடத்து கேந்திரத்தில் இருக்கும்செவ்வாய் தீர்த்து வைத்துவிடும்.  ஐந்தில் சனி உகந்தது அல்ல. உறவுகளிடத்திலும்,நண்பர்களிடத்திலும் பகைமையை சனி உண்டு பன்னுவார். கவனம்தேவை. அதே நேரம், உங்கள்தொழில்,பொருளாதாரம் எவ்வகையிலும் பாதிக்காது. சனியின் பாதகாதிபதி சுக்கிரன் ஆறில் அமைவது நற்பலனை தரும். எதிர்பாரத பண வரவுகளை இது கொடுக்கும்.
தனாதிபதி ஏழில்புதனுடன் இனைந்து இருப்பது மனைவி வழி உறவுகளின்மூலம் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். எட்டாம் இட கேதுவிற்கு சர்ப்பசாந்தி செய்வது நல்லது.
இந்த வாரம் ராசியான கிழமை செவ்வாய்,புதன். இந்த வாரம் ராசியான நிறம் இளம் சிவப்பு.  இந்த வாரம் வழிபடவேண்டிய கடவுள் துர்க்கை அம்மன்.
சிம்ம ராசி நேயர்களே….!
உங்கள் ராசியதிபதியும்,தனாதிபதி ஆறிலும் இருக்கும் நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது . இததனால் வரவுகளும் ,செலவுகளும் இனைந்தே வரும. எனவே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
இராண்டாம் இடத்து வக்கிரகுரு எட்டில் சந்திரனும் இருப்பதால் தொழில் ரீதியாக சில இழப்புகளை கொடுத்து விடும். முக்கியமாகவெள்ளி,சனிகிழமைகளில் கவனம் தேவை.
மூன்றில் இருக்கும்செவ்வாய் பகவான் சகோதர வழியில் நன்மைகளை கொடுக்கும். துணிச்சலை கொடுக்கும் அதை தொழில் ரீதியாக செயல்படுத்தாதீர்கள்.
நான்கில் கேந்திரம் பெற்று இருக்கும் சனிபகவான் தாய் உடல்நிலையை பாதிக்கும் மருத்துவ செலவுகள் கொடுக்கும் சனிபகவானுக்கு அர்ச்சனகள் செய்வதுஉத்தமம்.  ஐந்தில் இரக்கும் சுக்கிரபகவானால் மகாலட்சுமியின் அருள் பார்வை கிடைக்கும் இது பொருளாதார ரீதியாக வரவுகளை அதிகரிக்கும்.வெள்ளி,சனிகிழமை சந்திராஷ்டமமாக இருப்பதால் அந்நாட்களில் கவனம் தேவை.
இந்த வாரம் ராசியான கிழமை புதன்.  ராசியான நிறம் பச்சை.இந்த வாரம் வழிபட வேண்டிய கடவுள் பைரவர்.
கன்னிராசி நேயர்களே…!
உங்கள்ராசி அதிபதி ஐந்தில் இருக்கும் நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது. இது ஒரு நல்ல அமைப்பாகும். தொழில்,பொருளாதார ரீதியாக பெரியமாற்றங்களை கொடுக்கும். இரண்டில் இருக்கும் செவ்வாய் பகவான் முன் கோபங்களை அதிகரிக்கும். பேச்சுக்களால் சிலரை பகைத்து கொள்ள நேரிடும்,நிதானம் தேவை.
மூன்றில் இருக்கும் சனி குடும்பத்தில் இளைய உறவுகளுக்கு சுபகாரியங்கள் நடத்த உதவும்.  தனாதிபதி நான்கில் இருப்பதும் அற்புத அமைப்பாகும்பொருளாதார ரீதியாக மாற்றங்கள் அதிகரிக்கும்.
விரயாதிபதி சூரியன் ஐந்தில் இருப்பதால் குலதெய்வ,மற்றும் பிற ஆலயங்ளுக்கு பிராயணம் மேற் கொள்வீர்கள்.  ஆன்மீக சம்பந்தப்பட்ட செலவுகள்செய்வது உத்தமம்..
ஆறில் இருக்கும் கும்ப கேது எதிரிகளே இல்லாத நிலையை கொடுத்து விடும்..சனிக்கிழமை மதியம் முதல் திங்கள் மதியம் வரை சந்திராஷ்டமம்இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது..
இந்த வாரம் ராசியான கிழம புதன்,வியாழன் ராசியான நிறம் நீலம். வழிபட வேண்டிய கடவுள் சிவன்.
துலாம் ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி மூன்றிலும்,தனாதிபதி லக்கின கேந்திரத்திலும் இருக்கும் நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது.  இது நல்ல அமைப்பு. லக்கினத்தில்இருக்கும் செவ்வாய் பகவானால் சில விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உண்டு. வாகனத்தில் கவனம் தேவை.
இரண்டாம்இடத்து சனிபகவான் இரண்டாவது சுற்று நடக்கும் நபர்களுக்கு அபரிதமான யோகங்களை உண்டுபன்னுவார். மூன்றில் இருக்கும்சுக்கிரபகவானால் தொழில் ரீதியான சில வரவுகள்தடைபடும்.  மகாலட்சுமி வழிபாடு நிவர்த்தி செய்யும்..
நான்கில் சூரியன்,புதன் சேர்க்கை நன்மய தாய் வழியில் உதவிகள் வந்து சேரும். ஐந்தில் கேது குலதெய்வ வழிபாடு சிறப்பை தரும்.
திங்கள் கிழமை மதியம் முதல் செவ்வாய் கிழம முழுவதும் சந்திராஷ்டமம் நடப்பதால் இந்நாட்களில் கவனம் தேவை.
இந்த வாரம் ராசியான கிழமை புதன், திங்கள். ராசியான நிறம் மஞ்சள். வழிபட வேண்டிய கடவுள் முருகன்.
விருட்சக ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி செவ்வாய் மறைந்தும், ராசியில் சனிபகவானும் இருக்கின்ற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது. எல்லாம் இருக்கும், ஆனாலும்எதுவும் இல்லாத மனநிலையில் இருப்பீர்கள். காரணம் சனிபகவான்தான்யசனி பீரித்தி செய்யுங்கள்,திருநள்ளாறு சென்று வாருங்கள். அல்லது, அருகில்உள்ள சிவன் சனனிதியில் உள்ள சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள், ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.
இரண்டில் இருக்கும் சுக்கிரபகவான் பொருளாதாரத்தை சீரான நிலையில் வைத்திருப்பார். மூன்றில் இருக்கும் சூரியன்,புதன் சேர்க்கை அரசிங்க ரீதியிலானகாரியங்கள் தடைபெற்று வந்ததை விலக்கி, நல்ல செய்திகளை அளிக்கும்.
நான்கில் கேது உடல் பிரச்சனைகளை கொடுக்கும், உணவு விசயத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு கர்ப்பபை சம்பந்தமான பிரச்சனைகளை கொடுக்கும்.
பத்தில் ராகு இருப்பதால் கூட்டு தொழிலை தவிர்ப்பது நல்லது.  வக்கிரம் பெற்ற குரு பதினொன்றில் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும்தட்சிணாமூர்த்திக்கி அர்ச்சனை செய்வது நல்லது.
இந்த வாரம் ராசியான நிறம் வெள்ளை. ராசியான கிழமை ஞாயிறு ,திங்கள்.  வழிபட வேண்டிய கடவுள் சனி பகவான்.
தனுசு ராசி நேயர்களே…!
உங்கள் ராசியதிபதி பத்தில் வக்கிரம் பெற்று இந்த வாரம் தொடங்குகிறது.  இதனால் அலைந்து திரிந்தே காரியங்களை முடிக்க வேண்டியிருக்கும்.  ஆனால் சுக்கிரனால்  பொருளாதாரம் சீராக இருக்கும்.
இரண்டில் சூரியன்,புதன் இனைந்து இருப்பதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.  விளையாட்டு துறையில் புகழ் பெறுவார்கள்.
மூன்றில் இருக்கும் கேது துணிச்சலாக சில காரியத்தில் ஈடுபட்டு வெற்றிகளை ஈட்டுவீர்கள். ஒன்பதில் ராகு இக்காலத்தில் பித்ருக்களுக்கு திதி கொடுப்பதுஅவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். யோகாதிபதி செவ்வாய் பதினொன்றில் இருப்பது பூமி சம்பந்தமான அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொடுக்கும்.
இந்த வாரம் ராசியான கிழமை செவ்வாய். ராசியான நிறம் மஞ்சள், நீலம். வழிபட வேண்டிய கடவுள் சூரியன்.
மகர ராசி நேயர்களே…!
இந்த வாரம் உங்கள் ராசியதிபதி சனிபகவான் பதினொன்றில் இருக்கிறார். இது நல்ல அமைப்பு.  தொழில் ரீதியாக லாபகரமாக இருக்கும். ராசியில்இருக்கும் சூரியன்,புதன் சேர்க்கை கீர்த்திகளை கொடுக்கும்.  உங்கள் தலைமையில் ஆலயப்பணிகள்  நடக்கும்.
இரண்டில் கேது இருப்பது வீண் விவாதங்களை ஏற்படுத்தும்.  பேச்சில் நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.
லாபத்தில் சில பங்கு பொதுக்காரியங்களுக்கு செலவிடுவீர்கள்.  எட்டாம் இட ராகுவால் மணவாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படும். அனுசரித்துசெல்லுங்கள்.  பிரச்சனைகள் கொடுக்கவில்லை யென்றால் மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு கொடுக்கலாம்.  எனவே மனைவி உடல்நலம் மீது அக்கறைசெலுத்துங்கள்.
ஒன்பதாம் இடத்து குரு பகவான் நன்மைகளையே செய்வார்.  பத்தில் இருக்கும் செவ்வாய் தொழில் சங்டங்களை தருவார். கவனமுடன் இருப்பது நல்லது.
இந்த வாரம் ராசியான கிழமை வியாழன்,வெள்ளி.  ராசியான நிறம் மஞ்சள்.  வழிபட வேண்டிய கடவுள் புற்று உள்ள நாக சன்னிதி.
கும்ப ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி சனிபகவான் பத்திலும், சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருக்கும் போது இந்த வாரம் தொடங்குகிறது. இது பொருளாதா ரீதியாக நல்லலாபங்களை கொடுக்கும்.  ஆடம்பர அணிகலன்களை வாங்கி மதிழ்வீர்கள்.
ஏழில் இருக்கும் ராகு சிலருக்கு சுபகாரியங்கள் நடப்பதற்கு தடையாக இருக்கும். ராகு பீரித்தி, குல தெய்வ வழிபாடு புற்று உள்ள நாகசன்னிதியின் வழிபாடு ஆகியன நன்மைகள் அளிக்கும்.
அஷ்டமத்து வியாழன் வக்கிரம் பெற்று அமர்ந்திருப்பதால் சிறு சிறு சங்கடங்கள் நேரும். ஆனால் பெரியளவில் பாதிப்புகளை கொடுக்காதுதட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
ஒன்பதில் இருக்கும் செவ்வாய் தந்தை வழி உறவுகளில் யாருக்கவது திடீரென மாரகத்தை கொடுக்கும்.  பத்தில் இருக்கும் இருக்கும் சனி உங்கள்திறமையை பறைசாற்றும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள்.  விரயத்தில் சூரியன்,புதன் இருப்பது வீண் செலவுகளை ஏற்படுத்தும்.ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.
இந்த வாரம்  ராசயான கிழமை சனி,ஞாயிறு. ராசியான நிறம் நீலம்,வெள்ளை.  வழிபட வேண்டிய கடவுள் துர்க்கை அம்மன்.
மீனராசி நேயர்களே..!
இந்த வாரம் உங்கள் ராசியதிபதி ஏழில் வக்கிரம் பெற்று இருக்கிறார். அதே வேளையில் ஆறில் ராகு இருப்பதால் மற்ற கிரகங்கள் சாதகமற்று இருக்கிறார்கள். ஆனாலும் எந்த பாதிப்புகளும் ஏற்படாது.  தொழில் நன்றாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். அல்லது இடமாற்றம் ஏற்படும்.அது நன்மையாகத்தான் இருக்கும்.
யோகாதிபதி செவ்வாய் எட்டில் அமர்ந்திருக்கிறார். வருமானம் பெருகும். அதில் ஒரு பகுதியை தான தர்மத்துக்கு பயன்படுத்துங்கள்.
ஒன்பதில் இருக்கும் சனிபகவான் லாபஸ்தானத்தை மூன்றாம் பார்வையாக பார்ப்பது நல்லதே. எதிர்பாரத தனவரவுகள் கிட்டும்.
பத்தில் இருக்கும் சுக்கிரன் சிலருக்கு வெளிமாநில அல்லது  வெளிநாட்டு பிரயாணத்தை உண்டுபண்ணும்.
பதினொன்றில் சூரியன்,புதன் சேர்க்கை  இருப்பதால் கூட்டு தொழில்  செய்ய சிலர் முன் வருவார்கள்.  அவர்களுடன் இணைந்து தொழில் செய்து லாபம் ஈட்டுவீர்கள். தொலைதூரத்தில்  உள்ள  ஆலயங்களுக்கு பிராயணம் செல்வீர்கள்.
இந்த வாரம் ராசியான கிழமை திங்கள்,புதன்,ஞாயிறு.  ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை.  வழிபடவேண்டிய கடவுள் பெருமாள்.

Goto Top