savings
டெல்லி:
வரி விதிக்கப்பட்டால் பி.எப்., பணம் எவ்வளவு கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.,) பகுதிக்கு வரி விதிப்பு செய்ததன் மூலம் இக்கட்டான சூழ்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சிக்கிக் கொண்டார்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மறறும் தேசிய பென்சன் திட்டத்தில் இருந்து 40 சதவீதத்துக்கு எடுக்கும் பணத்துக்கு வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்ப்டடுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிடித்தம் செய்யப்படும் தொகையில் இருந்து எடுக்கும் பணத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தொழிற்சங்கங்கள், சம்பள பிரிவு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதையடுத்து இந்த கோரிக்கைகளை ஜேட்லி பரிசீலனை செய்வார் என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
‘‘ஒரு வேலை பி.எப்., தொகைக்கு வரி விலக்க அளித்து முந்தைய நிலைக்கே செல்ல மத்திய அரச முடிவு செய்தால், தேசிய பென்சன் திட்டம் கவர்ச்சிகரம் இல்லாமல் போய்விடும். எனினும் முழு வரி விலக்கை அமல்படுத்திவிட்டு, ரூ. 20 லட்சத்துக்கு மேலான தொகைக்கு வரி விதிப்பை அமல்படுத்தும் முடிவை நோக்கி மத்திய அரசு செல்ல வேண்டும்’’ என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘‘மேலும், பிஎப் முதலீடு மீதான வட்டி வருவாய், வேலை அளிப்பவரது பங்களிப்பில் ரூ. 1.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும் தொகை ஆகியவை வரி விதிப்புக்கு ஏற்ற வருவாயாக கருதப்படும். பட்ஜெட் அறிவிப்புகளுக்கும், நிதி மானிய கோரிக்கைக்கு இடையே குழப்பம் நிலவுகிறது’’ எனவும் தெரிவித்துள்ளனர்.
அட்டவணை
03budget-pf