வட கொரியா ஏவுதளத்தில் மீண்டும் ஒரு செயற்கைகோள் : ஏவுகனை பீதி
வட கொரியா ஏவுதளத்தில் மீண்டும் ஒரு செயற்கைகோள் : ஏவுகனை பீதி

வாஷிங்டன்:
வடகொரியா ஏவுதளத்தில் மீண்டும் ஒரு செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ராணுவ உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வட கொரியா பூமியை ஆய்வு செய்வதற்காக ஒரு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியதாக கூறியது.
ஆனால், இது ஏவுகனை சோதனை என அண்டை நாடுகளும், அமெரிக்காவும் கூறி வந்தன. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் அதில் இருந்ததாகவும், பூமியை ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பம் அதில் இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது வடகொரியான தனது செயற்கைகோள் ஏவுதளத்தில் மீண்டும் ஒரு செயற்கைகோளை விண்ணில் செலுத்த தயார் நிலையில் நிறுத்தி வைத்திருப்பதாக அமெரிக்காவில் ராணுவ உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவும் செயற்கைகோளா அல்லது ஏவுகனை சோதனையா என்ற சந்தேகம் அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் அண்டை நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா தனது எதிரி நாடுகள் மீது ஏவுகனை தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் ஏவுகனை தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.