சென்னை:

திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது என்று  பேசிய முக ஸ்டாலினை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

2

திருப்பூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின், “தற்போதைய ஆட்சியில் காவல்துறையில் ஆளுங்கட்சி குறுக்கீடு இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “திமுக ஆட்சிக்கு வந்தால், காவல் துறையில் அரசியல் தலையீடு இருக்காது”  என்றும் கூறினார்.

ஸ்டாலினின் இந்த பேச்சைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ramadas

அந்த பதிவு வருமாறு:

“திமுக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையில் அரசியல் தலையீடு இருக்காது” – மு.க. ஸ்டாலின்

#  ஆமாம்.. ஆமாம்.. ஜாபர்சேட் மேல சத்தியமாத்தான் அவர் சொல்றார்!

– இவ்வாறு முக ஸ்டாலினை கிண்டலடித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.