ஜெயலலிதா - மா. சுப்பிரமணியன்
ஜெயலலிதா – மா. சுப்பிரமணியன்

வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து,  தி.மு.க. சார்பில் முன்னாள் மேயரும், சென்னை தெற்கு மாவட்ட செயலருமான மா.சுப்ரமணியனை நிறுத்தப்படுவார் என்று பேசப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ,எம்.எல்.ஏ., பதவி இழந்த முதல்வர் ஜெயலலிதா, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து  சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின், முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவை எதிர்த்து, சென்னை தெற்கு மாவட்ட செயலர் மா.சுப்ரமணியனை நிறுத்துவதற்கு, தி.மு.க., மேலிடம், நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.