Monsoon_1472561f

 

சென்னை:

மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் பெய்த கன மழையால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பல வெள்ளத்தில் தத்தளித்தன. பெரும்பாலானா இடங்களில் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்கப்படும் நிலை உருவானது. தற்போதுதான் வெள்ளம் வடிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. “இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை உட்பட வடமாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், கன மழை பெய்யும்” என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

நேற்று இரவு 8 மணியளவில் எ்ழும்பூர், சிந்தாதிரிபேட்டை, புரசைவாக்கம், மூலக்கடை, பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், புழல் உட்பட நகரின் பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயல், கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் அதிலிருந்து மீளாத நிலையில், மறுபடி மழையா என்று சென்னை மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.