மீடியாவ பார்த்தாலே பயமா இருக்கு: வைகோ

Must read

vaiko_new
மக்கள் நலக்கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘மக்கள் நல கூட்டணி’ என்பதற்கு பதிலாக ‘மக்கள் நல கூட்டியக்கம்’ என்று குறிப்பிட்டு விட்டார் ஒரு நிருபர்.
வைகோவுடன் வந்திருந்த வழக்கறிஞர் ஒருவர் , ‘கூட்டணியை எப்படி கூட்டியக்கம் என்று நீங்கள் சொல்லலாம்?’ என்று அந்த நிருபருடன் விவாதிக்க தொடங்கினார். இதைப்பார்த்த வைகோ கண்டித்தார்.
அப்போது வைகோவின் கருத்தை அறிய முற்பட்டபோது, ‘‘ஏற்கனவே என்ன குத்தி குதறிகிட்டு இருக்கீங்க… மீடியாவ பார்த்தாலே பயமா இருக்கு…’’ என்று கூறி சென்றார். பின்னர் தன்னுடன் வந்த கட்சியினரை பார்த்து, ‘என் பின்னாடி எதுக்கு வந்துகிட்டு இருக்கீங்க… வராதீங்க… போங்க’ என்று கோபத்துடன் கூறி புறப்பட்டு சென்றார்.

More articles

Latest article