மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரித்தார் இளங்கோவன்!

Must read

சென்னை: 
டல்நலக்குறைவு காரணமாக சென்னை மைலாப்பூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரித்தார் தமிழக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திடீர் உடல் நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு  காவேரி மருத்துவமனையில் அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவரை கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மாற்று கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ். இளங்கோவன்  இன்று மதியம் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கருணாநிதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.
மூச்சு விடுவதில் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு தொண்டை – நுரையீரல் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், நோய்த் தொற்றுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டு அவர் நலமாக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ். அரவிந்தன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

More articles

Latest article