புதுச்சேரி:

புதுச்சேரி அமைச்சரவை பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. வரும் 6-ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 12 மணியளவில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

புதுச்சரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற்றது. யார் முதல்வர் என்கிற போட்டி, காங்கிரஸ் கட்சிக்குள் வைத்தியலிங்கம், நமசியவாயம், நாராயணசாமி ஆகியோருக்கிடையே நடந்தது.  இறுதியில் நாராயணசாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

a

அடுத்து அமைச்சர்கள் யார் யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில  இன்று காலை அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது.  புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக வைத்திலிங்கம் பதவியேற்க உள்ளார். அமைச்சர்களாக நமச்சிவயாம், மல்லாடி கிருஷ்ணசாமி, ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் அமைச்சர்களாக  அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி தராமல் சபாநாயகர் ஆக்கியதால் அவரது ஆதரவாளர்கள்ஆத்திரமடைந்து,தற்போது முதல்வர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.