பிலிம் நியூஸ் ஆனந்தன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் அஞ்சலி

Must read

f213cf5d-907b-4077-a858-72db749b0cab_S_secvpf
மிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன் (வயது 91) முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.  நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
பிலிம் நியூஸ் ஆனந்தன் உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அவரது உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா, வசந்த் குமார், ஆனந்த் ராஜ், சூர்யா, சிவக்குமார், பிரபு, ராம்குமார், பிரபு அண்ணன், உதயநிதி ஸ்டாலின், பார்த்தீபன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சின்னிஜெயந்த், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

More articles

Latest article