“காண வேண்டாமோ….”.. ஸ்ரீரஞ்சினி ராகத்தில் பாபநாசம் சிவன் பாடலை பாடுகிறார் அந்த பெண்.. கண்களை மூடி, ரசித்து, லயித்து அவர் பாட… ராகமும், வரிகளும், அந்த காந்தர்வ குரலும் உயிருக்குள் ஊடுருவி நம்மை மெய்மறக்கச் செய்கிறது.
அந்த தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இமானுவேல் மார்ட்டின்.. பிரான்ஸ் நாட்டு பெண்மணி!
கர்நாடக இசை மீது ஏற்பட்ட தீவிர ஆர்வத்தால், இந்தியா வந்து டி.எம். கிருஷ்ணாவிடம் இசை பயின்றவர். இப்போது சென்னையில் பல சபாக்களில் “வி.ஐ.பி.” நேரமான மாலை நேரத்தில் பாடிவருபவர்..
நேற்று நமது அலுவலகம் வந்திருந்தார்… அவரது வீடியோ பேட்டி.. பொங்கல் அன்று..
இப்போது அவரது இசையை கண்களை மூடி கேளுங்கள்.. கேட்டு ரசியுங்கள்..

கீழே உள்ள பட்டியலில் இருந்து வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்

பொக்கே கொடுத்து வரவேற்பு

பாடுதல்…. பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து உங்கள் கருத்து என்ன?
கடந்த 10 ஆண்டுகளில் பலரது இசையை கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ஆனால், இவர்களில் எம்எஸ் சுப்புலட்சுமியின் இசை தான் அற்புதமாக இருக்கும். எனது குரு உள்ளிட்ட யாரை எடுத்துக் கொண்டாலும், சுப்புலட்சுமியிடம் மட்டும் பல தனிச் சிறப்புகள் இருக்கும். எனது இதயத்தில் அவரது இசை இடம் பிடித்துவிட்டடது என்று தான் கூற வேண்டும்.

டி.எம்.கிருஷ்ணாவிடம் கற்றுக் கொள்ள எவ்வாறு வந்தீர்கள்?
சீத்தாராம ஆஸ்ரமத்தில் எனது தந்தை கர்நாடகா இசை கற்றார். சர்மாவிடம் கற்பதற்காக 1984&85ம் ஆண்டு எனது தந்தை சென்னை அடிக்கடி வந்தார். 89ம் ஆண்டு பிரான்சுக்க வந்து 3 மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது எனது குரு டி.எம்.கிருஷ்ணாவும் உடன் வந்தார். எங்களது வீட்டிற்கு வந்து குடும்பத்தோடு பேசி பழகினார். இதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து நாங்கள் குடும்பத்தோடு சகோதரர்களின் படிப்புக்காக இந்தியா வந்தோம்.
அப்போது டி.எம்.கிருஷ்ணாவை சந்தித்தோம். இதன் மூலம் தான் இந்தியாவுக்கும், டிஎம் கிருஷ்ணாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. எனது குடும்பத்தினர் பிரான்சில் உள்ளூர் மாணவர்கள் சிலருக்க அடிப்படை கர்நாடகா இசை வகுப்புகள் நடத்துவார்கள். ஒரு முறை பிரான்சுக்கு டி.எம்.கிருஷ்ணா வந்தபோது, அந்த மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தினார்.
இந்திய கலாச்சாரம் மற்றும் இசை எனக்கு பிடிக்கும். எனது தந்தை இந்த இசையை கற்றுக் கொள்ள என்னை கட்டாயப்படுத்தினார். ஆனால், நான் பள்ளி படிப்பு, இதர அனைத்து விஷயங்களை நிறைவடைந்த பிறகு, வயதான காலத்தில் கற்றுக் கொள்கிறேன் எனது தந்தையிடம் கூறினேன். கிருஷ்ணா அவர்களின் வகுப்பை கேட்ட பிறகு, நான் ஒரு வகுப்பு எடுக்க தொடங்கும் அளவுக்கு தயாராகிவிட்டேன்.
என்னை அறியாமல் நானே பாட தொடங்கிவிட்டேன். அதனால் பள்ளி படிப்பு முடிந்த பிறகு சென்னை வந்து முழுமையாக கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதற்கு முழுக்க முழுக்க குருஜி கிருஷ்ணா தான் கா ரணம்.

டி.எம்.கிருஷ்ணாவுடன் உங்கள் அனுபவம எப்படி இருந்தது?
அவரிடம் வித்தியாசமான பாடங்களை கற்றுக் கொண்டேன். 19 ஆண்டுகள் பிரஞ்ச் பற்றி தான் எனக்கு தெரியும். இங்குள்ள பாரம்பரிய இசை குறித்து எனக்கு எதுமே தெரியாமல் இருந்தது. எனது குரு தனிப்பட்ட ஆர்வத்துடன், எனக்கு ஒருவருக்கு மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் நடத்திய இரு வகுப்புகளில் கலந்துகோண்டவுடன் நான் முடிவு செய்துவிட்டேன். இதை கற்றே ஆக வேண்டும் என்று.
குரு சிஷ்யன் உறவு குறித்து கேள்வி பட்டிருக்கிறேன். இது போன்ற பாரம்பரிய இசையை முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ள இந்த குரு சிஷ்யா முறை மிகவும பயனுள்ளதாக இருந்தது. இசைக்கும் எனக்கும் இடையில் குரு தான் தூதுவராக இருந்து செயல்பட்டார்.
நான் ஒரு இந்தியரில்லை. நான் இங்கு மாணவியாக வந்தபோதும் எனது மன நிலைமை வேறாக இருந்தது. 5 அல்லது 6 வயதில் நான் படிக்க வந்திருந்தால் சிரமம் இருந்திருக்காது. ஆனால் நான் 19 வயதில் எனது மனமும், பழக்க வழக்கமும் ஒரு கலாச்சாரத்திற்குள் அடங்கிவிட்ட சூழ்நிலையில் இங்கு வந்தேன்.
குருவின் குடும்பத்தார் என் மீது அதிக அக்கறை கொண்டு எனக்கு நிறைய உதவி புரிந்தார்கள். இசை பயின்ற அனைத்து நேரங்களிலும் குருவின் உதவி எனக்கு மிகுதியாக இருந்ததை உணர முடி ந்தது. இத்தகைய குரு எனக்கு கிடைத்தது ஒரு பெரிய பரிசு தான்.
வேறு கலாச்சாரத்தில் வளர்ந்த நான் கர்நாடகா இசையில் நான் சாதித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. யாரை போலவும் நான் பாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பயிலும் போது ஒரு ஆசிரியர் நன்றாக அமைவார். சரியில்லை என்றால் நான் வேறு ஆசிரியரை தேடிச் செல்ல நேரிடும். ஆனால், எவ்வித சிரமமுமின்றி, எனது வெற்றிக்கு பின்னார் குரு டி.எம்.கிருஷ்ணா இருந்தார். இது போன்ற சந்தர்ப்பம் யாருக்கும் அமையுமா என்பது தெரியவில்லை.

உங்களது கர்நாடகா இசை சிடி மற்றும் பணிமனையை மேற்கத்திய நாட்டினர் எப்படி உணர்கிறார்கள்?
இசை சிடியில் கேட்ட சிலரிடம் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் அவர்கள் இசையை எப்படி ரசி க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அவர்கள் எப்படி இசையோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறா ர்கள் என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. பலர் கர்நாடகா இசை குறித்து ஆராய்ச்சி செய்து கோண்டிருக்கிறார்கள். இதுபோன்ற இசையை நான் கேட்டதே கிடையாது என பலரும் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள். மேற்கத்திய நாடுகளில் உள்ள குறுகிய நபர்கள் தான் கர்நாடகா இசை குறித்து அறிந்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், இசையமைப்பாளர்கள் தான் கர்நாடகா இசை குறித்து அறிந்துள்ளனர். பொது மக்கள் மத்தியில் அவ்வளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை. பணிமனைகளில் அடிப்படை தகவல்களை தான் அளிக்க முடியும்.
அவரவர் நாட்டிற்கு என்று தனித்தனி இசை இருக்கிறது. அப்புறம் ஏன் கர்நாடக இசை கற்றுக் கொள்ள அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நான் எண்ணியதுண்டு. ஆனால், உண்மையிலேயே அந்த கற்றுக் கொண்டு, கேட்கும் போது அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. இந்த இசை குறித்து அடிப்படை தெரிந்திருந்தால் தான் இதை பாராட்டக் கூட முடியும். அதை படித்து, அதை கேட்டு, அதை விரும்பினால் தான் கர்நாடக இசையுடன் தொடர்ந்து பயணிக்க முடியும்.
கர்நாடகா இசையை அவசர அவசரமாக கற்றுக் கொள்ள முடியாது. படிப்படியாக தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். நான் கற்க வந்தபோது முதல் நாளில் செய்வதறியாது தவித்தேன். ஆனால் எனது ஆசிரியர் தான் எதை படிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறி என்னை பக்குவப்படுத்தினார்.

மேற்கத்திய இசை மற்றும் இந்திய பாரம்பரிய இசையை கற்றுக் கொள்வதில் உள்ள வித்தியாசம்?
இரண்டும் முற்றிலும் மாறுபட்டது. தினமும் அதற்காக வீட்டில் பணியாற்ற வேண்டியிருந்தது. ஏற்கனவே நான் கற்றதை முற்றிலும் மறந்துவிட்டு புதிதாக படிக்க தொடங்கியது போல் இருந்தது. 5 வயது முதல் இசையுடன் பழகியிருக்கிறேன். மேற்கத்திய இசைக்கு பியானோ வாசிக்க 10 ஆண்டுகள் கற்றுக் கொண்டிருந்தேன். இதுவும் எனக்கு கர்நாடகா இசை கற்றுக் கொள்ள உதவியாக இருந்தது. பாரம்பரிய முறையில் குரு சிஷ்யன் என்ற அடிப்படையில் நேரடி உறவு முறை மூலம் கற்றுக் கொண்டேன். என்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கெ £ண்டேன்.எனது முழு வாழ்க்கையையும் இதற்காக அர்ப்பணித்து கற்றுக் கொண்டேன்.

ஏன் உங்களுக்கு தெரிந்த இங்கு பியானோ வாசிப்பை இங்கு சிறிய அளவில் கற்றுக் கொடுக்க கூடாது என்று கேட்கிறீர்கள். நான் இங்கு வந்த போது வெற்று காகிதமாக தான் வந்தேன். இங்கு இருக்கும் அனைத்தும் எனக்கு புதிதாக தான் இருந்தது.
எனது குடும்பம் இசை பாரம்பரியம் கொண்டது, எனினும் கர்நாடகா இசை என்பது முற்றிலும் புதிது. இங்கிருந்த எனது ஆசிரியர்கள் சில சமயங்களில், மேற்கத்திய இசை குறிப்புகளை மொழியாக்கம் செய்ய சொல்வார்கள். ஆனால் என்னால் அதை செய்ய முடியாமல் திணறினேன். எனது தந்தைக்கு அனுப்பி மொழியாக்கம் செய்யச் சொல்லி வாங்குவேன்.
அதுபோல அங்கிருந்து வந்தவுடன் எனக்கு எல்லாமே மறந்துவிட்டது. புது விஷயத்தை இங்கு கற்றுக் கொண்டதால், அங்கு பெற்ற பியானோ பயிற்சியை நான் மறக்க நேரிட்டது. என்னை விட சிறந்த பியானோ வாசிப்பாளர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இந்திய சினிமாவில் கர்நாடகா இசையின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது?
இந்திய சினிமாக்களை நிறைய பார்த்திருக்கிறேன். படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால் அதில் உள்ள வித்தியாசம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. எனது நண்பர்கள் பாராட்டுவதை வைத்து சில விஷயங்களை தெரிந்துக் கொள்வேன்.

கோவில்களில் பாடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சென்னையில் 2013ம் ஆண்டு சிவராத்திரி விழாவில் எனது முதல் நிகழ்ச்சி மத்திய கைலாஷில் நடந்தது. எனக்கு பிடித்தவற்றில் கோவில்களில் பாடுவதும் ஒன்று. அடுத்து கடந்த டிசம்பரில் விருகம்பாக்கத்தில் நிகழ்ச்சி நடத்தினேன். இதெல்லாம் எனக்கு பிடித்த இடங்கள்.
கடந்த ஜனவரியில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தெய்வத்தின் முன்பு உட்கார்ந்து பாடினேன்.
நான் ஒரு இளம் பாடகி. தற்போது தான் இந்த துறையில் நுழைந்துள்ளேன். அனைத்து சூழ்நிலைகளிலும் பாட சற்று தயக்கமாக தான் இருக்கும். ஆனால் கோவில்களில் பாடும்போது அது இயற்கையாகவும், சுதந்திரமாக இருப்பது போலவும் உணர்கிறேன். ஆடிட்டோரியத்தில் பாடுவதை விட கோவில்களில் பாடும்போது நான் வேற்று கலாச்சாரத்தை, நாட்டை சேர்ந்தவர் என்ற உணர்வு எனக்கு ஏற்படுவது கிடையாது.

மேற்கத்திய இசை மற்றும் இந்திய பாரம்பரிய இசையையும் இணைத்து ஏதும் நிகழ்ச்சி செய்யும் திட்டம் உள்ளதா?
இது வரை இது நடக்கவில்லை என்று நினைக்கிறேன். இரு மாறுபட்ட கலாச்சார இசை இணைந்து நடத்துவற்காக வழி இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொரு கலாச்சார பாடகர்களும், அவர்கள் சார்ந்த கலாச்சார இசையை மிகவும் மதிக்கிறார்கள். எனினும் இது போன்ற மாறுபட்ட இசை நிகழ்ச்சிகள் வெளி வர வேண்டும் என நினைக்கிறேன். இதில் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பல வித்தியாசமான இசைகள் வர வேண்டும் என்பதே விருப்பம்.

மதிப்புக்க பாடகர்கள் இன்று பலர் உள்ளனர். எனது நண்பர்கள் பலரும் எனக்கு அடித்தளமிட்டுள்ளனர். ரிதம் முரளி, டி.ரவிகிரண், விக்கேன்ஷ்வரன், ராம கிருஷ்ண மூர்த்தி, ரித்விக் ராஜா போன்று அற்புதமானவர்கள் உள்ளனர். இது ஒரு நீண்ட தூர பயணம், இந்த துறையில் உள்ளவர்கள் மேலும், மேலும் வளர்ந்து செல்வதை பார்க்கிறேன்.
பழமைவாய்ந்த, பராரம்பரியமான இந்த இசையை ஒரு சிறிய குழுவினர் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருவது அற்புதமானதாகும். எனது பெற்றோர் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள். உன் வழியில் செல் என்று என்னை அனுமதித்தார்கள். எனக்கு எந்த வேலையும் இல்லை. அதனால் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். ஆனால் சென்னையில் குடும்பத்தை காப்பாத்த வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்களால் என்னைப்போல் முழு நேரமும் இதில் ஈடுபடமுடியுமா என்பது கேள்விகுறிதான்.

 சேலை அணிந்தன் மூலம் கிடைத்த அனுபவங்கள்…?
நான் முதன் முதலில் இசை கற்றுக் கொள்வதற்காக இந்தியாவுக்கு வந்து குடியேறிய போது எனக்கு வயது 19. எனக்கு ஹிந்துயிசம் கலாச்சாரம் குறித்து தெரியாது. நான் இங்கே பெண்கள் சேலை அணிவதை பார்த்து ஆ ச்சர்யப்பட்டேன். சேலை அணிவது மிகவும் சிக்கலாக இருந்தது.
காலப்போக்கில் சேலை மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. இங்குள்ள சேலை கலாச்சாரத்தை உணர்ந்து, சேலை மீதான கவுரவம் குறித்து தெரிந்து கொண்டு, அதை மதிக்க துவங்கினேன்.
இங்கு வந்த புதிதில் என குருநாதர் கூறியபடி குர்தா உள்ளிட்ட ஆடைகளை உடுத்தினேன். பின்னர் நான் வெளிநா ட்டு பெண் தெரியபடுத்திக் கொள்ளாமல் இருப்பதற்காக சேலையை கட்ட தொடங்கினேன். சேலை கட்ட தொடங்கியதால் என்னை யாரும் அந்நியரை போல் நடத்தவில்லை. அதற்காக வீட்டில் எந்த நேரமும் சேலை அணி ந்துக் கொண்டு இருக்கவில்லை.
குருஜியுடன் இருக்கும்போது மற்றும் சில முக்கிய நிகழ்வுகளின் போது சேலை அணிந்து கொள்ள பிடிக்கும். சேலை அணிவது இயற்கையாக இருக்கும் என்பதாலும், பார்ப்பவர்களுக்கு தவறாகவும் தெரியாது என்பதால் சேலை அணிந்தேன்.
சேலைகளில் எனக்கு பிடித்தது காட்டன் வகை சேலைகள். காஞ்சிபுரம் சேலைகளும் பிடிக்கும். தமிழக பெண்க¬ள் எளிய முறையில் சேலை அணிவதை பார்த்திருக்கிறேன். நான் மாணவிகள் அணிவிது போல் முந்தானைக்கு பின் குத்தி அணிவேன். சேலை அணிய கற்றுக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் அது எனக்கு பிடித்திருந்தது. கோவில், ஆஸ்ரம், கிராமம், திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு செல்லும் போது சேலை அணிந்து செல்வேன்.
சேலை என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. சில சமயங்களில் சோம்பேறித் தனம் ஏற்படுவதால் சேலை அணியா மல் செல்வேன். சேலை அணிந்து செல்லும் போது எவ்வித விமர்சனமும் ஏற்படாததை உணர முடிந்தது. எந்த நாட்டில், எந்த கலாச்சாரத்தில் இருக்கிறேனோ அதற்கு ஏற்ப நான் மாறிக் கொண்டேன். இது நான் பழகிய, என்னை சுற்றியிருந்த மக்களுடனான உறவை மேம்படுத்தியது. நகரில் நான் சேலை அணிந்து சென்றபோது பெரிய அளவில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், கிராமங்களில் சேலை அணிந்து சென்றபோது மரியாதை கிடைத்தது.

இந்திய சமையலைக்கு ஏற்ப உங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?
15 வயதில் எனது குடுபத்தாருடன் இரு முறை இந்தியா வந்து ஒரு மாதம் சென்னை திருவான்மியூரில் தங்கியிரு ந்தேன். சென்னையை பற்றி எனது தந்தை கொஞ்சம் அறிந்து வைத்திருந்தார். இங்குள்ள சிறிய ஹோட்டல்களில் சாப்பிடுவோம். உணவு ரொம்ப காரமாக இருக்கும். அதனால் அழுவேன். கண்டிப்பாக இங்கே இருக்க மாட்டேன் என்று கூறினேன்.
இந்த நாட்டில் என்னால் வாழ்வது சாத்தியமல்ல என்று அழுதேன். அதன் பிறகு இசைக்காக வ ந்தபோது காரமில்லாத உணவுகள் கிடைக்கும் இடங்களை தெரிந்து கொண்டேன். சாப்பாடு, இட்லி, சோசை பிடி க்கும், எனது சொந்த அபார்ட்மென்டில் குடியிருக்கிறேன். அதனால் எது வேண்டுமானாலும் நான் சமைத்து கோ ள்வேன். 15 மாதங்கள் இங்கு இருந்துவிட்டேன். நன்றாக இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் நான் பிரான்ஸ் செல்கிறேன். வீட்டில் சமைக்கப்படும் தென் தமிழக உணவு வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் எனக்கு பிடித்திரு ந்தது.