பிரபாகரன் தற்கொலை செய்யவில்லை! : சரத்பொன்சேகா

Must read

praba

கொழும்பு: “பிரபாகரன், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சரான கருணா சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் பற்றி கூறும்போது, “அவர், தனது ன் கைத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறியிருந்தார்.

 

karuna

இந்த நிலையில், இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, “பிரபாகரன் தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “பிரபாகரனின் தன்னைத் தானே சுட்டுக்கொண்டிருந்தால் தலையின் அடுத்த பக்கத்தின் வழியாக தோட்டா  வெளியேறி இருக்கும். ஆனால் அவரது மண்டையோட்டின் ஒரு பகுதி பிளவுபட்டிருந்தது.  அவரது தலையில் மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல்  தாக்கியிருக்கலாம். மேலும் பிரபாகரன் உடல்தான் அது என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனையும் நடத்தப்பட்டது” என்று சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

sarath

 

இதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி., “போரின்போது  ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார் எனக் கூறுவது சரியானதாக இருக்காது. பிரபாகரனைச் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே நந்தி கடலில் மரணமடைந்துவிட்டனர் என்பது மட்டும் உண்மை” என்று கூறியுள்ளார்.

More articles

2 COMMENTS

Latest article