பிரச்சாரத்தின் வழியாகவும் மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள்: கனிமொழி

Must read

kani1
பிரச்சார பயணத்தை தொடங்குவதை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ’’மக்கள் வெளியே போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட கூடிய நேரத்தில், அ.தி.மு.க.வினர் மக்களை பிரசாரத்துக்கு அழைத்து வந்து வெயிலில் கொடுமைப்படுத்துகிறார்கள்.
5 ஆண்டு கால ஆட்சியில் கஷ்டப்படுத்தியது போதாது என்று, தற்போது பிரச்சாரத்தின் வழியாகவும் மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். இதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள்.
மக்களை சந்திக்காத, குறைகளை தீர்க்காத முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்துக்கு வளர்ச்சி திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என்றார். அதுவும் நடக்கவில்லை. தமிழகம் தொழில்துறையில் கீழே இறங்கி கொண்டிருக்கிறது.
தமிழக மக்களின் மிக முக்கிய கோரிக்கை மதுவிலக்கு. அதைப்பற்றி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது கவலைப்படவில்லை. இன்றைக்கு தேர்தல் நேரத்தில் படிபடியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார். இது மக்களை ஏமாற்றக்கூடிய ஒன்று தான். இதையெல்லாம் வைத்து, தி.மு.க. தேர்தல் அறிக்கை, கருணாநிதியின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிப்பேன்.
அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு மக்கள் எதிர்பார்க்க கூடிய மாற்று தி.மு.க. தான். கருணாநிதி தான்’’என்று கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article