‘பிட் அடிக்கும் மோசக்காரி’ சகமாணவர்கள் கேலி: 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

Must read

suicide
‘பிட் அடிக்கும் மோசக்காரி’
சகமாணவர்கள் கேலி: 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

அகர்தலா
பிட்  அடிக்கும் மோசக்காரி என்று தன்னை  சக மாணவர்கள் கேலி செய்த்தால் திரிபுரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திரிபுரா மாநிலத்தின் வடக்கு மாவட்டமான நுட்டான்னாகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னப்பூர்னா தேப்நாத். 16 வயதான இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார் .சில தினங்களுக்குமுன் பள்ளியில் ஆங்கிலத் தேர்வு நடந்தது. அப்போது அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அவர் ‘பிட்’ பேப்பர்கள் வைத்திருப்பதாகவும் அவரை ‘மோசக்காரி’ என்றும் கிண்டல் செய்துள்ளனர். இதுதொடர்பாக தேர்வுக் கண்காணிப்பாளரிடமும் சக மாணவர்கள் புகார் செய்துள்ளனர். ஆனால் அவரைப் பரிசோதித்த தேர்வுக் கண்காணிப்பாளர் எவ்வித ‘பிட்’ பேப்பர்களையும் கண்டுபிடிக்கவில்லை.
இதுபற்றி தன்னுடைய தாயாரிடமும் அன்னபூர்ணா சொல்லி அழுதிருக்கிறார். தொடர்ந்து யாருடனும் பேசாமல் மனமுடைந்த நிலையில் விரக்தியாகவே காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அறை ஒன்றில் கடிதம் ஒன்று எழுதிவைத்துவிட்டு  தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

More articles

Latest article