பாகிஸ்தான்:  நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை படை  தாக்குதல் : 10 பேர் மரணம்

Must read

160307102918_pakistan_suicide_bomb_blast_624x351_epa
 
பாகிஸ்தானின் வட மேற்கில் ஷப்கதார் நகரில்  உள்ள நீதிமன்ற வளாகத்தில், ஒரு தற்கொலை படை தீவிரவாதி, தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.  குறைந்தது இருபத்து ஏழு பேராவது காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானிய தாலிபானுடன் தொடர்புடைய ஒரு தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநரை கடந்த 2011ஆம் ஆண்டில் கொலை செய்த குற்றத்திற்காக கடந்த வாரம் முன்னாள் காவல் துறை அதிகாரி தூக்கிலிடப்பட்டார். இதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் விதமாக  இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய அந்த தற்கொலை குண்டுதாரி முயற்சித்ததாகவும், அவரை காவல் துறையினர் தடுத்தவுடன் அவர் தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். . காயமடைந்தவர்கள் ஷப்கதார் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

More articles

Latest article