நல்லக்கண்ணு - தா. பாண்டியன் - ஜெயலலிதா
நல்லக்கண்ணு – தா. பாண்டியன் – ஜெயலலிதா

டந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 2014 பிப்ரவரி மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியது:
“காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று கூறுகிறார்கள்.  இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் சேர்ந்துதான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் முன் கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இது நரேந்திர மோடிக்கும் பொருந்தும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது  அணியை உருவாக்கி வருகிறோம். அதற்காக தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். வேறு சில கட்சிகளும் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளன.
ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று அதிமுகவினர் பேசுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதுபோன்ற சூழல் உருவானால், ஜெயலலிதாவை பிரதமராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும்!”

  • இவ்வாறு நல்லக்கண்ணு தெரிவித்தார்.