க. தமிழன் (Tamizhan Ka)  அவர்களின் முகநூல் பதிவு:
a

ருத்துவமனை கட்டிலில் அமர்ந்திருப்பவர் கூடலூரை சேர்ந்த நண்பர் கரிகாலன்.. என்னைப் போல வெளிநாட்டில் வேலை பார்க்கும் சாதாரண ஒரு தொண்டன்.. வைகோவை ஓரிருமுறை சந்தித்திருக்கிறார்.. சிங்கப்பூரில் வேலை செய்கிறார்.. அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தபோது சந்தித்தேன்..
இவருக்கு திடீரென்று நெஞ்சு அடைப்பு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் முதற்கட்ட சோதனைகளை முடித்துவிட்டு சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்..
இந்த விஷயம் வைகோவிற்கு அவரின் உதவியாளர்கள் மூலம் செல்ல, “இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த மருத்துவமனையிலா அட்மிட் ஆவீங்க… உடனே அப்போலோ மருத்துவமனைக்கு போங்க”- என்று கரிகாலனை கடிந்து கொண்டு, அப்போலோவில் உள்ள மருத்துவர்களுக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனக்கு மிகவும் வேண்டியவர் கரிகாலன், அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்றிருக்கிறார்..

அதோடு நில்லாமல் உதவியாளர் அடைக்கலம் அண்ணனை நேரில் அனுப்பி கரிகாலனை அப்போலோவில் அட்மிட் செய்திருக்கிறார் நேற்று (05-04-2016).
கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள், கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை மற்றும் தொகுதிகளை தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சிகளின் நெருக்குதல்கள், இது தவிர தனது சொந்த கட்சிக்காரர்களின் நெருக்குதல்கள், ஜெயலலிதா அரசின் வழக்குகள், கருணாநிதியின் நோட்டீசுகள், கருணாநிதியின் நரித்தந்திரங்கள், சபரீசன் குழுவினர் கொடுத்த தொகைக்கு வஞ்சகமில்லாமல்வைகோவை குத்திக் குதறும் மீடியாக் கழுகுகள் – இவற்றை சமாளிக்கவே தியான மனநிலையும் ஒரு நாளைக்கு 50 மணி நேரமும் தேவை..
இதைத் தவிர இன்று (06-04-2016) வைகோ தாயகத்தில் அளித்த பேட்டி தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, ஆங்காங்கே கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு ஒரு கொதிப்பான அரசியல் தட்ப வெப்ப சூழ்நிலைக்கு இடையே, கரிகாலனை மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்த போட்டோவை இப்போதுதான் பார்த்தேன்.. என்ன சொல்றதுன்னு தெரியல..!
I just put myself in Vaiko’s shoes and think what I would have done in this situation.. No words to say..!
# என்ன மனுஷன்யா நீ?