மூத்த பத்திரிகையாளர் த.நா. கோபாலன் அவர்களின்முகநூல் பதிவு:

தளி ராமச்சந்திரன்
தளி ராமச்சந்திரன்

“நேற்று ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழருடன் நடந்த உரையாடல்:
“எப்டி இருக்குது தேர்தல் நிலவரம்?”
“நல்லா இருக்குங்க…ஒரு சில தொகுதிகளிலாவது ஜெயிச்சிருவோம்…”
“எங்கெங்கே”
“ம்ம்..தளி…ராமச்சந்திரன் ஒரு நல்ல ஃபோர்ஸ் அவ்ரு ஜெயிச்சிருவாரு”
படார் படார் என்று என் நெற்றியில் வேகமாகவே அறைந்துகொண்டேன்.
அவர் சற்று அதிர்ந்து கூட போயிருக்கக்கூடும்.
“அந்தாளு ஜெயிக்கணுமா…வேணாமய்யா…அந்த மாதிரி ஆளையெல்லாம் மீண்டும் மீண்டும் நிக்க வைக்கிறீங்கங்குறதுக்காகவே உங்க கட்சி எங்கேயும் ஜெயிக்கக்கூடாது…தா.பா போயும் சிபிஐ இப்டித்தான் இருக்குதா…கொடுமையப்பா…
“இல்லை தோழர் அவரைப் பத்தி தவறா பிரச்சாரம் பண்ணியிருக்காங்க…உண்மையிலே…”
நான் நகர்ந்துவிட்டேன்!