நாளை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Must read

gr1
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார குறுந்தகடு சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. குறுந்தகட்டை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், தங்கள் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றார். இந்த தேர்தலில், கட்சியின் கொள்கைப்படி, தான் போட்டியிடவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரூர் தொகுதியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கி இருப்பதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த திரு.வி.க. நகர் தொகுதி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

More articles

Latest article