நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலைக்கு காரணம் என்ன ?

Must read

Sai-Prashanth
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்த சாய் பிரசாந்த்,  பெரிய திரையில் சமீபமாக தலைகாட்ட ஆரம்பித்தார். . இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இவரது தற்கொலைக்கான காரணத்தை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். மதுவில் விஷம் கலந்து குடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
 
திரையுலகில் இந்த மரணம் குறித்து பேசப்படுவதாவது:
“சாய் பிரசாந்த் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில்தான் சுஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
சாய் பிரசாந்த் மிக திறமையான கலைஞர். ஆனால் அவருக்கு குடிப்பழக்கம் உண்டு. “பெரிய திரையில் இப்போதுதான் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. மதுப்பழக்கம் நல்லதல்ல” என்று மனைவி சுஜிதா கூறிவந்திருக்கிறார்.
ஆனால் சாய் பிரசாந்தால் மதுப்பழக்கத்தை விடமுடியவில்லை. இதனால் அவருக்கும் மனைவி சுஜிதாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சுஜிதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மனைவி பிரிந்த வேதனை, குடிப்பழக்கத்தையும் விட முடியாத நிலை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சாய் பிரசாந்த், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்” என்று திரைப்பட வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.
 

More articles

Latest article