1
டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை  நடத்திவரும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ” டாஸ்மாக்கைத் தேர்தலுக்கு முன்பாகவே மூடவேண்டும் என்பதுதான் மக்களது விருப்பமே தவிர, படிப்படியாக மூடவேண்டும் என்பதல்ல. இந்த நிலையில் ஏன் தேர்தல் ஆணையம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டு தேர்தல் நடத்தக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.
இன்று அந்த அமைப்பினர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, “டாஸ்மாக் கடைகளால் ஆலை முதலாளிகளும், தமிழக அரசும்தான் லாபத்தில் கொழுக்கின்றன.  ஆனால் தமிழ்நாடு சுடுகாடாய் மாறிக் கொண்டிருக்கிறது. கரூரில், மூன்று பேர் டாஸ்மாக் வாசலிலே  குடித்து இறந்துகிடந்தார்கள்.இது எத்தனை கொடுமையாந விசயம்?
தமிழகத்தை இந்த டாஸ்மாக் சீரழிவிலிருந்து மீட்க தேர்தலுக்கு முன்பாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம்” என்று மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு  தெரிவித்தார்.
மேலும், ” அரசியல்வாதிகளின்  வாக்குறுதிகளை நம்பாமல் தங்கள் பகுதியில் நடக்கும் டாஸ்மாக் ஒழிப்பு போராட்டத்திற்கு எங்கள் அமைப்பை அழைத்தால். போராட்டத்திற்குத் தலைமை தாங்க தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.