செல்போன் பேசியபடியே கொடியேற்றுகிறார் இளங்கோவன்
செல்போன் பேசியபடியே கொடியேற்றுகிறார் இளங்கோவன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று அக் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். பல்லாவரம் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம்,  பம்மல் நகராட்சித் தலைவராக இருக்கும் இவர், 2014 ஆண்டு சுதந்திர தினத்தன்று செய்த செயல்தான்.
அன்று பம்மல், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடி ஏற்ற வந்தார் இளங்கோவன்.  காரிலிருந்து இறங்குவதற்கு முன்பே ஏதோ போன் வந்துவிட்டது.
காதில் போனை செருகியபடியே இங்கியவர், பேசிக்கொண்டே வந்தார், பேசிக்கொண்டே கொடியேற்றினார், பேசிக்கொண்டே காரில் ஏறினார்…  பறந்துவிட்டார்.
பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படி தேசியக்கொடியை அவமதிக்கிறாரே என்று அங்கிருந்தவர்கள் குமுறினார்கள். இப்படி செல்போனில் பேசிக்கொண்டே கொடியேற்றியது ஊடகங்களிலும் வெளியானது. இந்தகாரணத்துக்காக அவர் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது.
சமூகவலைதளங்களில் இந்த “செல்போன் கொடி” போட்டோ பரவி பலத்த கண்டனத்துக்கு ஆளானது.
ஆனால் மனிதர் மன்னிப்பு கேட்பதாய் இல்லை.
அந்த மனிதருக்குத்தான் நகராட்சி தலைவர் பதவியிலிருந்து எம்.எல்.ஏவாக பதவி உயர்வு பெற வாய்ப்பு கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதைக் குறிப்பிட்டு சமூகவலைதளங்களில் அந்த புகைப்படத்துடன் பலரும் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வேறேன்ன செய்ய?