திருநெல்வேலி:
மக்கள் நல கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது. இன்று நெல்லையில் தே.மு.தி.க.- மக்கள்நல கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்ட்ததில், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலருமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு இரண்டு 2 பவுன் மோதிரத்தை அணிவித்தார்.