திருப்பதி திருமலை கோயில் தகவல் மையம்
திருப்பதி திருமலை கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் 24 மணி நேரமும் இலவசமாக தெரிந்து கொள்ளலாம்.
1இந்தியாவில், ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம் திருப்பதி. இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று இது. திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து. சுவாமியை தரிசனம் செய்யலாம். இலவச தரிசனம் செல்வோர் திருமலையில் உள்ள கோவிலுக்கு நேரில் செல்ல வேண்டும்.

  • வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள், தங்கும் விடுதியில் உள்ள அறைகள் காலியாக உள்ளதா அல்லது நிறைம்பி வழிகின்றதா?
  • வயது முதிர்ந்தவர்கள் சுவாமியை எவ்வாறு சீக்கிரம் தரிசனம் செய்வது?
  • மிகவும் பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ளவர்கள் சுவாமியை விரைவில் சென்று தரிசனம் செய்ய இயலுமா?
  • உடல் ஊனமுற்றோர் எவ்வாறு சுவாமி தரிசனம் செய்வது?
  • திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டும் என்றால் யாரை அனுக வேண்டும்?
  • குழந்தைகளுக்கு காது குத்து வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
  • உண்டியலில் பணம் செலுத்தவது எப்படி?
  • நன்கொடை கொடுப்பது எப்படி? எந்த பெயரில் கொடுக்க வேண்டும்?

inaugurating-the-rs-300-current-booking-counters-at-srinivasam-complex-3-copyமேலும், கோவிலில் வாரி ஆர்ஜித சேவைகள், அதற்கான கட்டணங்கள், முக்கியத் திட்டங்கள், குடில்கள், திருப்பதிக்கான விமான சேவை போன்ற எல்லா தகவல்களும் ஒரே ஒரு போன் மூலம் பேசி உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்று ஒன்றுதான். அது, 0877 – 22 33 333 மற்றும் 0877 – 22 77 777 மற்றும் 0877-2231777, Toll Free nos: 1800425111111, 1800425333333 எண்ணில் போன் செய்து தகவல்களை இலவசமாக பெறலாம். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 24 மணி நேரமும் இலவச தகவல் மையம் செயல்படுகிறது. Website: http://www.tirumala.org/Advancebooking.aspx
இந்த தகவல் மையத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் என்று இல்லாமல் எந்த மொழியில் வேண்டும் என்றாலும் நமது சந்தேகத்திற்கு பதில், அந்த மொழியிலேயே கிடைக்கிறது. இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி பயன் பெறலாம்.