யாழ்ப்பாண23 3bgம்:

மிழக மீனவர்கள், இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதை இலங்கை, இந்திய அரசுகள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரி இன்று காலை யாழ்.மாவட்ட மீனவர்கள் மாபெரும் போராட்டமும் பேரணியும் நடத்தினர்.

வடமாகாண கடல் தொழிலாளர் கூட்டுறவு இணையம், யாழ். மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம், மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின.

“தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். மேலும் கடல் வளமும் சுரண்டப்படுகிறது.   இதனை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலத்தினர் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிபர் செயலகத்தை அடைந்த போராட்டக்காரர்கள், அங்கு யாழ். அரச அதிபர் வேதநாயனிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அடுத்ததாக, யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்று அங்கும் மனு அளித்தனர்.

இங்கு போராட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் |இலங்கை அரசும், இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம்” என்று தெரிவித்தனர்.