“கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவை” நிர்பந்தகொலை” செய்தவர் எஸ்.பி. செந்தில் குமார்தான்” என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ் பகிரங்கமாக  தெரிவித்திருக்கிறார்.

விஷ்ணுப்ரியா - யுவராஜ்
விஷ்ணுப்ரியா – யுவராஜ்

தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜ், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இன்று  வேலூர் சிறையிலிருந்து வெளிய வந்த யுவராஜ், “ கோகுல்ராஜ் வழக்கை விசாரித்த விஸ்ணுபிரியா அதிகாரிகள்  டர்ச்சராலேயே தற்கொலை செய்துகொண்டார். இது நிர்ப்பந்தக்கொலை. அதாவது, வேறு வழியே இல்லை.. தற்கொலை செய்துகொள்வதுதான் ஒரே வழி என்கிற அளவுக்கு மேலதிகாரிகள்.. அதாவது  மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார். டார்ச்சர் செய்தார். அதனால்தான்  விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கான  ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று யுவராஜ் தெரிவித்தார்.