திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45) புகழ்பெற்ற இடது சாரி பாடகர். கிராமிய இசையில், நடப்பு அரசியல், சமூக சூழ்நிலை குறித்து பாடல்களைப்பாடி வருகிறார். இவரது “மூடு டாஸ்மாக்கை!” ஊரூக்கு ஒரு..” ஆகிய இரு பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாடப்பட்டுள்ள இவற்றில் தமிழக அரசையும், ஜெயலலிதா மீதான விமர்சனங்களும் உண்டு.
இந்த இரு பாடல்களும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி, பல லட்சம் பேரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
இந்த நிலையில் தோழர் கோவன், நள்ளிரவில் சைபர் க்ரமை் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 124 – ஏ–(தேசத்துரோக குற்றம்: சட்டபூர்வமாக அமைந்த அரசை அகற்ற திட்டமிடுவது) பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவன் கைதை கண்டித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவனின் கைதுக்கு காரணமான பாடல்களில் ஒன்று ஊத்திக்கொடுத்த உத்தமி. அந்த பாடல்..
கோவன் கைது குறித்து ம.க.இ.க. அமைப்பு வெளியிட்டுள்ள சிறு வீடியோ அறிக்கை கீழே..