சென்னை:

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு போய்ஸ் தோட்டப் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திலிருந்து அதிமுக கூட்டம் நடக்கும் திருவான்மியூர் வரையில்  ஜெ. வை துடிபாடி விளம்பர பேனர்கள் அனுமதி இன்றி வைக்கப்பட்டன.

இது பொதுமகா்களுக்கு இடையூறாக இருக்கிறது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் செந்தில் ஆறுமுகம், டிராபிக் ராமசாமி ஆகியோர் பேனர் வைக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. விசாரணை வரும் ஜனவரி 5ம் தேதி நடக்கும் என்றும் கூறியது.

8

 

ராதாகிருஷ்ணன் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அறப்போர் இயக்கத்தினர் அகற்றினார்கள்.  ஏற்கனெவே இந்த அமைப்பின் சார்பில் கடந்த 30ஆம் தேதியன்று சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் மாநகராட்சியில் 100 பதாகைகளுக்கு மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு, இராதாகிருஷ்ணன் சாலையில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரங்களை அதிமுகவினர் வைத்துள்ளனர் என்றும் இந்த இயக்கத்தினர் குற்றம்சாட்டினர்.

கைது செய்யப்பட்ட மூவர்
கைது செய்யப்பட்ட மூவர்

அதைத் தொடர்ந்து, இன்று மதியம் 12 மணிவாக்கில் பொதுமக்களுக்கு இடை யூறாக இருக்கும் பேனர்களை அகற்றப்போவதாகவும் இந்த இயக்கத்தினர் அறிவித்தனர்.

அதன்படி இன்று மதியம் இராதா கிருஷ்ணன் சாலையில் அனுமதியில்லாத பேனர்களை அகற்றினார்கள். அவர்களை அதிமுக கரைவேட்டி கட்டிய சிலர் கடுமையாக தாக்கியதுடன், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்ததனர்.

புகார் மனு
புகார் மனு

 

அதையடுத்து அறப்போர் இயக்கத்தின் சந்திரமோகன் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை கண்டுகொள்ளாத காவல்துறை… அதற்கான புகாரையும் கையிலெடுக்காத காவல்துறை..    அதை அகற்றியவர் கடுமையாக தாக்கப்பட்டதை பொருட்படுத்தாத காவல்துறை…

அனுமதி இன்றி.. மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பேனர்களை அகற்றியதால் அடி வாங்கியவர்களை கைது செய்திருக்கிறது!

வாழ்க அம்மா நாமம்! வாழ்க அடிமை காக்கிகள்!