இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில தலைவர் பி.வி. கதிரவன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, இந்திய தவ்ஜீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கடந்த 13ம் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதன் பிறகு மார்ச் 23–ந்தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
நேற்று மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, மற்றும் ஏ.எஸ். பாத்திமா முசப்பர் ஆகியோர் தங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் போயஸ்கார்டன் சென்று முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் எத்தனை கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதிகள் கிடைக்கும் என்பது தெரியவில்லை. இது தவிர அ.தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்து வரும் மேலும் 4 கட்சி தலைவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க கடிதம் கொடுத்து விட்டு காத்திருக்கின்றனர்.
அக்கட்சிகளின் விபரம்:
1. இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் பஷீர் அகமது. 2. இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் கட்சி
3. பசும்பொன் மக்கள் கழக தலைவர் ச.இசக்கிமுத்து. 4. இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் வேட்டவலம் மணிகண்டன்.