ஜட்டி யோகாவுக்கு பேடண்ட் கேட்கும் சர்ச்சை சௌத்ரி

Must read

பிக்ரம் சௌத்ரி
பிக்ரம் சௌத்ரி

 

யோகாசனங்களை வைத்தே பல கோடி டாலருக்கு அதிபராகிவிட்ட அமெரிக்க வாழ் இந்தியர் பிக்ரம் சௌத்ரி, அவரது பிராண்ட் யோகாவிற்கு காப்புரிமையெல்லாம் கோரமுடியாது என்று ப்ளோரிடா மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

26 ஆசனங்கள் மற்றும் இரண்டுவித மூச்சுப் பயிற்சிகள் ஆகியவற்றே தானே உருவாக்கியிருப்பதாகவும், எனவே அவற்றைத் தான் மட்டுமே பயன்படுத்தமுடியும். மற்றவர்கள் அதன் மூலம் பயன்பெற விரும்பினால் தனக்கு ராயல்டி வழங்கவேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார்.

ஆனால் நீதிபதி வார்ட்லா, இது குறித்த சவுத்ரியின் புத்தகங்கள் மற்றும் வீடியோ சிடிக்களுக்கு காப்புரிமை அளிக்கப்படலாம், தவறில்லை, ஆனால் வேறு எவருமே தனக்கு கப்பம் கட்டிவிட்டுத்தான் அத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கோருவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல எனக் கூறிவிட்டார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த 70 வயதான பிக்ரம் சற்று வக்கிரமான ஆளும் கூட. நவீன பாணி யோகா என்று சொல்லிக்கொண்டு உள்ளாடை மட்டும் அணிந்து பொதுவில் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நல்ல ‘ரெஸ்பான்ஸ்.’ இருக்காதா பின்னே. வருபவர்களும் அப்படி உடை அணிந்து வந்தால்! இவரது யோகா கவர்ச்சியானது என்ற புகழ் அமெரிக்காவெங்கும் பரவியது. பணம் அள்ளிக்கொட்டியது.

தங்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பெண்கள் சிலர் வழக்கு தொடுக்க அவர் இன்னும் பிரபலமானார்.

யோகா கற்றுத் தரும் பல்வேறு அமைப்புக்களுக்கும் இப்போது நிம்மதி, சந்தோஷம். “இந்தாளு ஆசனங்களினால் நன்மைகள் உண்டு என்பது உண்மையே. அதற்காக ராயல்டி கோருவதா? யோகா பயிற்சியை இவரா கண்டுபிடித்தார்…பேராசை பிடித்த மனிதர்.. நல்ல அடி…வேண்டும் இவருக்கு,”  என்கின்றனர் மற்ற பயிற்சியாளர்கள்.

நம்ம ஊர் பாபா ராம்தேவுக்கும் ஜக்கி பாபாவுக்கும்தான்…அவர்களுக்கு என்ன லாபம், அதனால்தான்”யோகாவிற்கு எவரும்  உரிமை கொண்டாடமுடியாது இந்தியாவின் சொத்து இது,” என அவர்கள் முழங்குகின்றனர்.

– த.நா.கோபாலன்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article