3
 
இயக்குனர் கௌதம்மேனன்  சிம்புவை வைத்து எடுத்துவரும் “அச்சம் என்பது மடமைடா”  என்ற படத்தில் இன்னும் சில காட்சிகள் பாக்கி இருக்கின்றன.  சிம்பு எப்போது நடித்துக்கொடுப்பார் என்று புரியாத நிலை.
இதற்கிடையே,  “என்னை நோக்கி பாயும் தோட்டா’
என்ற படத்தை கௌதம் மேனன் இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில்  முதலில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது.  ஆனால் தற்போது அவர் இல்லை. தனுஷ்நடிக்கிறார்.
தனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து  வெற்றிமாறன் இயக்கும் வட சென்னைபடத்தில் நடிப்பதாக ஏற்கெனவே முடிவாகியிருக்கிறது. ஆகவே அந்தப்படத்திலும்  கௌதம்மேனன்படத்திலும் ஒரே நேரத்தில் நடிப்பார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.
பெரிய நடிகர்கள் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிப்பது சமீபகால வழக்கமாக இருக்கிறது. இப்போது அதை மாற்றியிருக்கிறார் தனுஷ்.