சூரியன் உதிக்க கை உதவும் : குஷ்பு

Must read

kusboo
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றம் தேவை, மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’ இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மக்களுக்கு கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். மக்களுக்காக எந்த ஒரு திட்டங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை. டாஸ்மாக் மூலம் தமிழக மக்களை வீணடித்துவிட்டார். கேரளாவில் பூரண மதுவிலக்கு சாத்தியமாக இருக்கும் போது, தமிழகத்தில் ஏன் சாத்தியம் இல்லை.
இந்த தேர்தலில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏற்றபடி பணத்தை செலவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் அதை தடுக்க வேண்டிய வேலைகளில் காங்கிரஸ் முழு நேரமும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் இந்த தேர்தலில் இலை உதிரும். சூரியன் உதிக்கும். கை உதவும்.
காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை குலாம் நபி ஆசாத் முடிவு செய்வார். என்னை தேர்தலில் நிற்கச்சொல்லி மேலிடம் சொன்னால் நிற்பேன்’’ என்று தெரிவித்தார்.

More articles

Latest article