சென்னை

னைத்துக் கட்சி கூட்டத்துக்குச் சுயேச்சை எம் பி என்ற முறையில் ஓ பி ரவீந்திரநாத் அழைக்கப்பட்டிருக்கலாம் என அதிமுக பிரமுகர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்

நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.  சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஓ பி ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

சமீபத்தில் அவர் தேனி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள வேளையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது பேச்சுப் பொருளானது.  இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜெயகுமார், “இன்றைக்கு இந்தியாவே அதிமுக பெரிய சக்தி என உணர்ந்துள்ளது.  அதிமுகவுக்கு இந்த  அடிப்படையில் இத்தனை முக்கியத்துவம் கிடைத்துள்ளது.  ஓ பி ரவீந்திரநாத் தேனி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனவே அதிமுக சார்பில் நாடாளுமன்றத்துக்கு நாங்கள் கொடுத்த கடிதத்தில் அவர் அதிமுகவில் இல்லை எனத் தெரிவித்துள்ளோம்.    ஆகவே அவரை சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைத்திருப்பார்கள்” எனப் பதில் அளித்துள்ளார்.