விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில்  இன்று தீ விபத்து ஏற்பட்டது. நூறு  தொழிலாளர்கள் விபத்து பகுதியில் சிக்கியிருக்கிறார்கள்.மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
சில்வார்பட்டியில் உள்ள  அந்த ஆலைக்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.வெடிகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருப்பதால் தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்தை நெருங்க முடியவில்லை.
இதுவரை 5 அறைகள் முழுவதும் எரிந்துவிட்டதாகவும், இன்னும் 5 அறைகள் எரிந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.