சிம்ம ராசி
சிம்ம ராசி

ஆக்கபூர்வமாக சிந்திக்கும் சிம்ம ராசி அன்பர்களே…
ராகுவின் பலன்கள்:
இதுவரை இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்து, வாக்குவாதங்களையும் குடும்ப குதர்க்கங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைகிறார். இது உங்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். பேச்சில் கனிவு பிறக்கும். பிடிவாதப் போக்கை கைவிட்டு, அனைவரிடமும் நட்புடன் பழகுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். . எதிர்பார்த்திருந்த பணம், கைக்கு வந்து சேரும்.
ஆனால் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் உடல் நலம் சிறு அளவில் பாதிக்கக்கூடும். கவனம் தேவை. .அதோடு உணவுக்கட்டுப்பாடும் அவசியம். பண விவகாரத்தில் ஏமாறும் வாய்ப்பு உண்டு. மோசடி பேர்வழிகளின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.
08.01.2016 முதல் 10.03.2016 வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். இதனால் பல காரியங்களை சாதிப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். மாற்று மொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. வழக்கு தொடர்பான விசயங்களுக்காக அலைச்சல் ஏற்படும்.
11.03.2016 முதல் 15.11.2016 வரை தடைப்பட்ட வேலைகள் அனைத்தையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் தேடிவரும். .
16.11.2016 முதல் 25.7.2017 வரை கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அதுமட்டுமல்ல.. பொதுவாகவே எந்த ஒரு விசயத்திலும் கூடுதல் கவனம் தேவை. புது வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு: திருப்பாம்புரம் ஸ்ரீசேஷபுரீஸ்வரரை வணங்குங்கள்.
 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் அமர்ந்து பலவிதத்திலும் உங்கள் எண்ணங்களை சிதறடித்துக்கொண்டிருந்த கேதுபகவான் இப்போது ராசிக்கு 7-ல் அமர்கிறார். ஆகவே இதுவரை இருந்த மனப்போராட்டங்களில் இருந்து விடுபட்டு, தெளிந்த சிந்தனைகள் ஏற்படும். அதே நேரம், உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் மீது சந்தேகம் கொண்டு மனவருத்தப்படும்படி பேசக்கூடும். பொறுத்துப்போவது நல்லது. நண்பர்கள் உங்கள் மனதைப்புரிந்துகொள்ளாமல் போகலாம். அதையும் பொறுத்துப்போவது நல்லது.
உங்கள் மேலதிகாரி, உங்கள் குறைநிறைகளை சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொண்டு உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் செய்யுங்கள். மனைவிக்கு உடல் உபாதை ஏற்படக்கூடும். மருத்துவ செலவை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். அரசு விவகாரங்களில் தொல்லை ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. இந்த காலகட்டத்தில் புனிதப்பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். சிலர், தங்கள்குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். .
08.01.2016 முதல் 12.07.2016 வரை புதிய திட்டங்கள் தீட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். தந்தை – பிள்ளைகளுக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் அகலும்.  மகளுக்கு எதிர்பார்த்திருந்த திருமண செய்தி வந்து சேரும். தாயாருக்கு இருந்த நோய் தீரும். தடங்கல்களை மீறி பூர்விக சொத்து வந்து சேரும். அல்லது புது சொத்து வாங்குவீர்கள். சகோதரர்கள் உதவுவார்கள். .
இந்த ராகு கேது மாற்றம் ஆரோக்கிய குறைவையும், காரியத் தடைகளையும், அளித்தாலும், உடனிருந்து மறைமுக தொல்லை தருபவர்களை அறியும் காலமாகவும் அமையும்.