வாட்ஸ்அப்பும் வதந்தியும் போல, திரைப்பாடலாசிரியர் சிநேகனும் சர்ச்சைகளும் பிரிக்கமுடியாததுதான் போல!
snekar-sasi
ஆபாசமாக கவிதை எழுதியதாக ஒரு பெண் கவிஞர் குறித்து சர்ச்சை எழ, “இப்படி எழுதுபவர்களை மவுண்ட் ரோடில் வைத்து கொளுத்த வேண்டும்” என்று சொல்லி தீயைக் கிளப்பினார் சிநேகன். பிறகு,”விருதுகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. என்னிடம் கூட கேட்டார்கள்” என்று பட்டாசு கொளுத்தினார். பிறகு, “கட்டிப்பிடி” கல்யாணங்கள் செய்துவைத்து திகிலை ஏற்படுத்தினார்.
இப்போது, முதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டும் என்று உருக்கத்துடன் பேசி வீடியோ வெளியிட்டார். ஆனால் அதில் சசிகலாவை மறைமுகமாக தாக்கியிருக்கிறார் என்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இது குறித்து patrikai.com  இதழில் செய்தி வெளியிட்டோம்.
இதையடுத்து நம்மை தொடர்புகொண்ட பாடலாசிரியர் சிநேகிதன், தனது தரப்பை எழுதி அனுப்பினார்.
அவரது கடிதம்:
“வணக்கம்.
தங்கள் இணையத்தளத்தில் முதல்வர் குறித்து என் கவிதை குறித்தான செய்தி பதிவு ஒன்றை பார்த்தேன்
அந்த கவிதையில் சில வரிகள் சின்னம்மாவிற்கு எதிராக இருப்பது போல் சித்தரித்து இருந்தது
அதைக்கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானேன்
எனது கவிதை அன்புக்குரிய முதல்வர் அம்மாவின் மேல் கொண்ட தூய்மையான பாசத்தின் வெளிப்பாடு
இதில் சின்னம்மாவை நான் ஏன் சாட வேண்டும்
சின்னம்மா அவர்கள் முதல்வர் அம்மா மேல் கொண்ட அன்பால் தன் குடும்ப வாழ்க்கையையே தியாகம் செய்தவர் என்பதை உலகமே அறியும்
அவர்களை நான் ஏன் விமர்சிக்க போகிறேன்
விமர்சிக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது
நான்மட்டும் அல்ல இந்த உலகத்தில் முதல்வருக்கும் சின்னம்மாவிற்கும் இடையே உள்ள தியாகத்தை விமர்சிக்கஎவருக்குமே தகுதி இல்லை
நான் சின்னம்மா  மேல் கொண்ட அன்பும் மரியாதையும் எவ்வளவு உண்மையானது என்பது சின்னம்மாவிற்க்கும்தெரியும் ஏன் இந்த உலகத்திற்கும் தெரியும்
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிலர் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தி குழப்பங்களை விளைவிப்பதையே வழக்கமாககொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்
இதுபோன்ற வருத்தமான நேரங்களில் இப்படிப்பட்டகேவலமான சிந்தனையோடு செயல்படுவது வருத்தத்தை தருகிறது”
இவ்வாறு நமக்கு அனுப்பிய கடிதத்தில் சிநேகன் தெரிவித்துள்ளார்.