சசிகலாவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உண்ணாவிரதம்!
சசிகலாவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உண்ணாவிரதம்!

சென்னை,
அதிமுகவுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையேற்பதை கண்டித்து சட்டபஞ்சாயத்து இயக்கம் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு ஜெ.வின் தோழி சசிகலா மறைமுகமாக முயற்சி செய்து வருகிறார். இதன் காரணமாக ஆட்சியில் பங்குபெற ஆசை கொண்டுள்ளார். இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்து வருகிறார். இந்நிலையி
ல் நாளை அதிமுக பொதுக்குழு கூட இருக்கிறது. ஆனால், அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவை முன்னிறுத்துவது அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், அதிமுகவுக்கும் ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் 3 நாட்கள் உண்ணாவிரதம், மற்றும் கையெழுத்து இயக்கம் நேற்று முதல், சென்னையில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சட்டபஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு தலைமை வகித்த சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ கூறியதாவது:
ஆளுங்கட்சியின் முன்னணி நிர் வாகிகளே சசிகலா தலைமை தாங்க வரும்படி கோரி வருவதை தினமும் பார்க்கிறோம். சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா அக்கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா தேர்வு செய்யப்படுவைதை பொதுமக்களோ, அதிமுக தொண்டர்களோ விரும்பவில்லை. கட்சி முன்னணியினரை கொண்டு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஒருமுகப்படுத்துவதற்காகவும் இந்த உண்ணாவிரதப் போராட்டமும், கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியிருக்கிறோம்.
சசிகலா தலைமையை எதிர்க் கும் ஒவ்வொருவரும் இப்போராட் டத்தில் ஒரு மணி நேரமாவது கலந்துகொண்டு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவிக்கக் கோரு கறோம்.
இவ்வாறு அவர் கூறினர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.