கோஸ்டா ரிகாவில் விமானம் நொறுங்கி விழுந்து 12 பேர் பலி

Must readசான் ஜோஸ்: 

கோஸ்டா ரிகா நாட்டில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாயினர்.

தனியார் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 10 வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள கோஸ்டாரிகாவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென விழுந்து விபத்துக்குள்ளாது. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள புண்டா இஸ்லிடா பகுதியில் பறந்து கொண்டிருந்த விமானம்  திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இறந்த 12 பேரில் 10 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் விமான ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article