9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறிய 48-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
gambhir-pandey-1605கவுதம் கம்பீரும், ராபின் உத்தப்பாவும் கொல்கத்தாவின் இன்னிங்சை தொடங்கினர். உத்தப்பா ஏமாற்றம் அளித்து அவுட் ஆனார். கம்பீர்-பாண்டே ஜோடி பொறுமையுடன் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தியது.10 ஓவர்களில் கொல்கத்தா அணி 90 ரன்கள் சேர்த்தது. நல்ல முறையில் விளையாடிய கம்பீர் தேவையில்லாமல் ரன் அவுட் மூலம் விக்கெட்டை தாரை வார்த்தார். கம்பீர் தொடர்ந்து மனிஷ் பாண்டேவும் அரைசதத்தை நிறைவு செய்தார் அவுட் அக கோல்கட்டா விக்கெட்கள் சரிவுக்குள்ளானது. கடைசியாக அதிரடி அடம் மூலம் ஆந்த்ரே ரஸ்செலும், ஷகிப் அல்-ஹசனும் கைகோர்த்து கொல்கத்தாவை 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் குவித்தது.
abdevilliers-viratkohli-ipl9-600-12-1462992316184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலியும், கிறிஸ் கெய்லும் அதிரடி தொடக்கம் அமைத்து தந்தனர். கெய்ல் 49 ரன்கள் எடுத்த அவுட் ஆனார்.  அடுத்து டிவில்லியர்ஸ் களம் இறங்கினார். கோலி 32 ரன்களில அவுட் ஆகி இருக்க வேண்டியது அவர் கொடுத்த வாய்ப்பை கம்பீர் கோட்டை விட்டார். கோலி-டிவில்லியர்ஸ் ரன்வேட்டையை கொல்கத்தா பவுலர்களால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த இயலவில்லை. பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை வசப்படுத்தியது. கேப்டன் கோலி 75 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 59 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இறுதிவரை விளையாடினர்.
இதன வெற்றி மூலம் மூலம் பிளே-ஆப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது பெங்களூர் அணி. இருப்பினும் இதுவரை 7 வெற்றிகள் கண்டுள்ள கொல்கத்தாவும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கிறிஸ் கெய்ல மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹஸ்சி 733 ரன்களும் குவித்ததே ஒரு ஐ.பி.எல். தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்களாக இருந்தது. அச்சாதனையை விராட் கோலி நேற்று தகர்த்தார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் எடுத்தது மூலம் ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 752 ரன்களாக (12 ஆட்டம்) உயர்ந்துள்ளது. இதில் 3 சதமும், 5 அரைசதமும் அடங்கும்.