கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர்

Must read

கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும் : சங்கரின் தந்தை கண்ணீர்
இளவரசன், கோகுல்ராஜை தொடர்ந்து சாதி ஆணவத்திற்கு பலியான சங்கரின் மரணத்தால் தமிழகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற இந்த சாதி ஆணவக்கொலையில் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கெளவுசல்யாவின் தந்தை சின்னசாமி சொல்லியே இந்த கொலையை செய்ததாக 5 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தப்படுகொலை சம்பவத்தில் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த சின்னசாமியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ’’கெளரவக் கொலையின் கடைசி பலி என் மகனாக இருக்கட்டும்’’ என தலித் இளைஞர் சங்கரின் தந்தை வேலுச்சாமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

More articles

Latest article