குழந்தைக்கு புகை! பரவும் அதிர்ச்சி வீடியோ!

Must read

smoking_0

மீபத்தில் சிறுவர்க்கு மதுவை புகட்டும் வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இன்னொரு அதிர்ச்சி வீடியோ பரவிவருகிறது.

சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில், குழந்தையை தனது மடியில் அமர வைத்துள்ளார் ஒரு இளைஞர். அந்த குழந்தைக்கு, பீடியை புகைப்பதற்காக கொடுக்கும் அந்த நபர், பீடி புகைக்கும் படி குழந்தையை வற்புறுத்துகிறார்.

பீடியின் நச்சுத்தன்மை தாங்காமல், குழந்தை இருமுவதும், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதோடு, அங்கு கூடியிருப்பவர்கள் குழந்தை பீடி புகைப்பதை கைதட்டி ஊக்குவிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

குழந்தைகள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருகிறது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ காட்சி, குழந்தைகள் தினமான நேற்று முதல் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ தமிழக கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதேபோல ஒரு குழந்தைக்கு வற்புறுத்தி மது குடிக்கவைக்கும் நபரின் வீடியோ வெளியானபோது, அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article