கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க கேரள முன்னாள் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
achuthananda
தமிழ்நாட்டில கன்னியாகுமரி அருகே உள்ள  குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க கடந்த சில வருடங்களாக தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு இப்போதுதான் மத்திய அரசு அனுமதி அளித்து  உள்ளது.
இந்த துறைமுகம் அமைந்தால் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் அழிந்துவிடும் என்று கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு  கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளது. குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது  குறித்து கேரள  சட்டசபையில் விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.