pages.indd
வீதியில்  கீரை விற்றுகொண்டுசெல்கிறாள் ஒரு பெண்.
தன் வீட்டு வாசலில் கணவனோடு அமர்ந்திருந்த பெண்மணி,, கீரை வாங்கஅவளை கூப்பிடுகிறாள்.
” ஒரு கட்டு கீரை என்ன விலை….?”
” பத்து ரூபாய்!”
“பத்து ரூபாயா… ஏட்டு ரூபாய்தான் தருவேன்!”
“இல்லம்மா வராதும்மா”.
” அதெல்லாம் முடியாது. ஐந்து ரூபாய்தான்!”
–    பேரம் பேசுகிறாள் அந்தகுடும்பத்தலைவி.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்றுவிட்டு “மேல  ஒரு ரூபாயாவது போட்டு கொடுங்கம்மா”என்கிறாள்
“முடியவே முடியாது. கட்டுக்கு   எட்டு  ரூபாய் என்றால் வாங்குகிறேன்!” .. என்றுபிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு”சரிம்மா உன் விருப்பம்” என்று கூறிவிட்டு ஒரு  கட்டு கீரையை கொடுத்துவிட்டு எட்டு  ரூபாயை வாங்கிக் கொண்டாள். கூடையை தூக்கி தலையில் வைக்கபோகும் போது அப்படியே கீழே சரிந்தாள்.
குடும்பத்தலைவி,  “ஏன்… காலையில் ஏதும்சாப்பிடவில்லையா…?” என்று  கேட்க, “இல்லம்மா போய்தான் கஞ்சிகாய்ச்சிணும்” என்றாள் கீரை விற்கும் பெண்மணி.
“சரி. இரு இதோ வர்றேன்.” என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டு நிறைய ஆறுஇட்லியும், கூடவே  சட்னியும்  கொண்டு வந்தாள்.
” இந்தா சாப்ட்டு போ” என்றுகீரைப்பெண்மணயியிடம்  கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்தஅந்த குடும்பத்தலைவியின் கணவருக்கு ஒன்றும் புரியவில்லை.  ஒரு ரூபாய் அதிகம் தருவதற்கு யோசித்தவள், தட்டு நிறைய இட்டிலிகளை கொண்டுவந்து தருகிறாளே என்று நினைத்துக்கொண்டார். ஆனால் அப்போது எதுவும் கேட்கவில்லை அலுவலகம் சென்றுவிட்டார்.
ஆனால்  அவருக்கு மனதில் அந்த கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது. ஓய்வு நேரத்தில் மனைவிக்கு போன் போட்டார். தனது மனதில் இருந்த கேள்வியை மனைவியிடம் கேட்டார். “ஒரு ரூபாய் அதிகம் தர விருப்பம் இல்லாத நீ, எப்படி அத்தனை இட்டிலிகளை கொடுத்தாய். அதன் மதிப்பு என்று பார்த்தால் குறைந்தது இருபது ரூபாயாவது வருமே..அது நட்டம் இல்லையா..” என்றார்.
அந்தகுடும்பத்தலைவி சொன்னாள்:
“”வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாது!”