சென்னை: கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலாலுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையின் 16வது சட்டமன்ற கூட்டத்தொர் வரும் 21ந்தேதி தொடங்குகிறது. முதல்கூட்டம் என்பதால் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் திங்கட்கிழமை தொடங்கி உள்ள கூட்டத்தொடரில், உரை நிகழ்த்த வருமாறு  தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்’

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த  கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார். இந்தகூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்பதால், அதற்கான சோதனை முகாம்  இன்று தொடங்கி உள்ளது.