k21

றுநாளே அபிநயாவிடம் இருந்து call வர சொல்லுங்க அபி.

இன்னிக்கே meet பண்ணலாமா பா…

ஹலோ நீங்க தானே அபி வீட்ல guest வந்திருக்காங்கன்னு சொன்னீங்க!

பரவாயில்ல நீங்க free யா.

நேத்தே சொன்னேனே நான் free ன்னு நீங்க தா…

Ok ok எங்க வர்றீங்க

நீங்களே சொல்லுங்க பா உங்க வீட்டுக்கு வேணும்னா வரட்டா அபி.

வேண்டா பா guest இருக்காங்க பேசமுடியாது.

சரி அப்ப நீங்களே சொல்லுங்க அபி மெரினா பீச் வந்திடுங்க எவ்வளவு நேரத்தில் வருவீங்க.

ஒரு முக்கா மணிநேரம் ஆகும் பா.

சரி நானும் வரசரியா இருக்கும் வாங்க அபிநயாவின் பதட்டம் புரியாமல் குழம்புகிறாள் நாயகி.

மெரினா சென்றடைய அபிநயாவும் வர சரியாக இருக்கிறது.

ரொம்ப நேரம் ஆச்சா பா

இல்ல அபி இப்ப தான் வந்தேன்.

நிழல்ல கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா…

சரி அபி இருவரும் அமர, சொல்லுங்க அபி… என்ன சொல்ல…(பேச்சில் ஒரு வித விரக்தி இருக்கிறது ) ஒண்ணு கேப்பேன் உண்மைய சொல்லணும் பா.

கேளுங்க…

எழுத்தாளர் எப்படி ?

எப்படினா !? எனக்கு புரியல…

அவனோட குணம் எப்படின்னு கேட்டேன்.

நல்ல டைப் தான் ஏன் கேக்குறீங்க ?

உண்மைய சொல்லுங்க பா

ஹலோ விஷயம் என்னனு சொல்லுங்க first…

என்னோட frd உஷா ஆனந்த் இருக்காள…

ஆமா தெரியும் என்னோட லிஸ்ட்ளையும் இருக்காங்க ஆனா அதிகம் பேசியதில்ல

அவ கிட்ட தப்பா பேசியிருக்கான். இன்னும் சிலரும் தப்பா சொல்றாங்க அதான் நீங்க அவனோட frd so உங்க கிட்ட கேட்டேன்.

அபியின் பதட்டம் டென்சன் பார்க்கையில் நிறைய விஷயம் புரிய அமைதியாக நாயகி

எனக்கு அவன புடிக்கும். அவன் எழுத்து இன்னும் புடிக்கும், என்னோட frd அவ்வளவு தான் பா

நீங்க அவனோட frd தானே அப்போ சவிதா விசயத்தில் உங்க பேச்சை ஏன் கேக்கல

தெரியாது அபி என்னை பொருத்தவரை தான் அவன் என்னோட frd…

புடிக்குனா எப்படி பா ! சற்று சந்தோகத்தோடு இழுக்க, கையை பற்றிய சங்கதி தெரிந்திருந்தது அபிக்கு. அதை நாயகி மறுக்கவும் இல்லை. ஆனா எப்படி தெரிந்தது என்று மட்டும் குழம்புகிறாள்.

அபி உங்க கேள்வி திரும்பவும் தப்பா இருக்கு. நல்ல frd நானும் ஸ்ரீயும் அவனும் meet பண்ணி பேசியிருகோம். எனக்கு நிறைய frds கிடையாது. யாருகிட்டயும் என்னோட சொந்த பிரச்சனைகளை பேசியதும் இல்ல… பேசமுடிந்ததும் இல்ல… ஆனா இவனோட பேசும் போது ஒரு ஆத்மார்த்தமான உணர்வு. இயல்பா பேசமுடியிது… தயக்கமோ பயமோ இல்ல அவனும் என் கிட்ட தப்பா பழகினது இல்ல அதனால ரொம்ப பிடிக்கும்.

அப்பறம் எதுக்கு பா இத்தனை பேரோட பழகணும்.

யாரோட பேசின என்ன பழகின என்ன நம்ம கிட்ட மரியாதையா இருக்கானா அவ்வளவு தான். So என்னை பொருத்தவரை நல்லவன் தான்.

எத்தனை பேரோட பழக அவனுக்கு என்ன தான் வேண்ணும் அவனுக்கு. அபிநயாவின் ஆதங்கம், இயலாமை, ஒரு வித வெறுப்பு எல்லாம் அபிநயாவின் பேச்சில் வெளிப்படுவதை உணர, சூழ்நிலையை மாத்த நினைக்கும் நாயகி.

விடுங்க அபி அவன் ஒரு எழுத்தாளன் so எல்லாரோட emotionals தெரிஞ்சுகறதுகாக இருக்கும் பா.

ஒண்ணு கேக்கவா பா. குரல் ஒடிந்து கொஞ்சம் பயம் கலந்து கேட்க

கேளுங்க அபி.

நம்ம பேசிய பழகிய விஷயத்தை வச்சு ஏதும் மிரட்டுவானா பா.

Pls அபி அவன அப்படி யோசிக்காதிங்க அவன் நிச்சயம் அப்படி பண்ணமாட்டான். இதையே தான் காவியாவும் கேட்டா அவகிட்டயும் அப்படி தான் சொன்னேன் அவன் அவ்வளவு மோசமானவன் இல்லப்பா… (ஆனால் நாயகியின் கணிப்பு தவறு என்பதை சிக்கிரமே உணர்த்த போகிறான் நாயகன்) எதார்த்தமாக உளறி விட

காவியா யாருப்பா…

காவியாவை பற்றி ஒரு சில விசயங்கள் மட்டும் சொல்லிமுடிக்க, ஏற்கனவே அபிநயாவும், காவியாவும் தோழிகள் என்பது தெரிகிறது. ஆனால் எழுத்தாளர் பற்றி பொதுவாக மட்டுமே பேசி இருந்த நிலையில் நாயகியின் மூலம் மேலும் தகவலோடு அபிநயா கிளம்ப, போகும் போது

நம்ம மீட் பண்ணியதை அவன் கிட்ட சொல்லாதிங்க பா…

ஓகே அபி ஆனா நான் உங்கள meet பண்றது ஸ்ரீக்கு தெரியும் அபி அவ கிட்ட எதையும் மறைக்க மாட்டேன் அபி.

அவங்க சொல்லவேண்டானு சொல்லிடுங்க பா

Ok அபி. இருவரும் தனித்தனியே புறப்பட நாயகி ஸ்ரீக்கு போன் பண்றா.

ஸ்ரீ நான் பீச் ல இருக்கேன் அபிநயாவை meet பண்ணபோறேன்னு சொன்னேன்ல…

ஆமா ஆனா அது நாளைக்கு தானே சொன்ன…

ஆமா திடீர்ன்னு போன் பண்ணி உடனே பார்க்கனுன்னு சொன்னாங்க அதான் வந்தேன்.

என்ன அப்படி அவசரமாம்.

அங்க தான் ஸ்ரீ வரேன் நேர்ல சொல்றேன்.

சரி வா… என்னனு oral ல சொல்லு…

எல்லாம் உன் ராசா சங்கதி தான். வந்து சொல்றேன் wait பண்ணு.

ஹும்ம்ம் … என் கிட்டயும் நிறைய News இருக்கு வா சொல்றேன்.

என்ன இவ வேற குண்டை தூக்கி போடுறளேனு யோசிச்சு கிட்டே ஸ்ரீ வீட்டுக்கு போறாள் நாயகி.